யாழ். வடமராட்சி கிழக்கில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியிடமிருந்து கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இராணுவத்தின் பலாலி படைத்தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பலாலிபடைத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம் பாது காப்புப் படைத்தலைமையகப் படையினரால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் 2 கிலோ வெடிபொருள்களுடன் கூடிய சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டை நாகர்கோயில் மீன்பிடித் துறைமுகத்தில் புதைத்துவைத் திருந்தமைக்காகக் கைதுசெய்யப்பட்டார்.