42 பேர் பலி! 2,882 பேருக்கு புதிதாகத் தொற்று

323

நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா வைரஸால் மரணமடைந்ததாக இன்று அதிகாலை தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் மரணமடைந்தோர் தொகை ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 882 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 593 ஆக உயா்ந்துள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் என்பவற்றில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 839 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here