மே 18 நினைவேந்தலை அரசாங்கம் தடுக்காது! – அமைச்சர் டக்ளஸ்

397

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு கோட்டாபய – மஹிந்த தலைமையிலான அரசாங்கம் தடை விதிக்காது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இறந்தவர்களுக்கான மதக் கடமைகளை நிறைவேற்றுவது அனைவரினதும் உரிமையெனவும் அவர்குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர அரசாங்கம் தடை விதிக்குமா? என்று குறித்து முல்லைத் தீவிற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் விவகாரம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் எமது கையை பலப்படுத்தினால் அரசியல் கைதிகளின் விடுதலை உடனடியாக இடம்பெறும் என்றேன்.

அது விருப்ப மில்லாமலே மக்கள் தனக்கு வாக்களிக்க வில்லை என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தெடர்பில் பலர் உங்களிடம் நேரடியாகவே வருகை தந்து கோரிக்கை விடுத் துள்ளனர்.

இந்த விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல பலருக்கு பலவிதமான அபிப் பிராயங்கள் இருக்கின்றன.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் அரசியல் கைதிகள் தொடர்பாக முடிவெடுப்பதற்கு எனக்கு கூடிய வாக்குகளையும் கூடிய ஆசனங்களையும் தருமாறு கேட்டிருந்தேன்.

அப்படி தந்திருந்தால் இந்த பிரச்சனையை உடனடியாக தீர்ப்பேன் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால், மக்கள் அந்த பிரச்சனையை தீர்க்க விரும்பவில்லையோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here