கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்துடையமாபெரும் ரென்னிஸ் போட்டியும் உலகில் அதிக மதிப்புமிக்கதில் ஒன்று மான பிரெஞ்சு ஓப்பன் ரென்னிஸ் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது.
1891 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரெஞ்சு ஓப்பன் ரென்னிஸ் போட்டியானது தற்போது 125 ஆவது தடவையாக நடைபெறவுள்ளது.
உலகப் போர் நிலவிய காலகட்டங்களில் பிரெஞ்சு ஓப்பன் போட்டிகள் மட்டுமல்லாது அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளும் நடத்தப்படாதிருந்தது.
இவ்வாண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் ரென்னிஸ் போட்டியான பிரெஞ்சு ஓப்பன் ரென்னிஸ் போட்டியானது, கோவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக வழமை போன்று ரோலன்ட் கரோஸ் மைதானத்தில் நடைபெறமாட்டாது.
ரசிகர்களின் வருகையை தவிர்த்துக்கொள்வதற்காக, அதேபெயரிலான ரோலன்ட் கரோஸ் விளையாட்டரங்க தொகுதியில் நடத்தப்படவுள்ளது.
கடந்த முறை நடத்தப்பட்ட பிரெஞ்சு பகிரங்க போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் சம்பியன் பட்டத்தை ‘களிமண் தரை காளை’ என வர்ணிக்கப்படும் ஸ்பெய்னின் ரபேல் நடால் கைப்பற்றியிருந்தார். இது அவரின் 13 ஆவது பிரெஞ்சு பகிரங்க பட்டமாகும்.
பெண்களுக்கான ஒற்றையர் சம்பியன் பட்டத்தை போலாந்தின் இகா ஸ்வெட்டெக் முதல் முறையாக கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த முறையை போன்று இம்முறையும் நடால் மற்றும் சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் ஆகியோருக்கிடையில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பதாக ரென்னிஸ் விமர்சகர்கள் கருதுகின்றனர்.