ஐ.பி.எல். தொடர் எமிரேட்ஸிலேயே!

588

எஞ்சியுள்ள ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) தெரிவித்துள்ளது.

14ஆவது ஐ.பி.எல். இருபது-20 தொடர், கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன்
நடந்தது.

ஆனால், பல்வேறு கட்டப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பின்புதான் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் முதல் சுற்றுப் போட்டிகள் சுமுகமாக நடந்தன.

ஆனால், 2-வது சுற்று தொடங்கியவுடன் கொல்கத்தா அணியின் வீரர்கள் சந்தீப் வாரியர், சக்ரவர்த்தி, டில்லி கப்பிட்டல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா, சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சஹா, சென்னையின் பயிற்றுவிப்பாளர் பாலாஜி எனப் பலர் பாதிக்கப்பட்டனர்.

இதனால் ஐ.பி.எல். தொடர்ரை தொடர்ந்து நடத்துவது சாத்தியமில்லாத சூழல் இருப்பதையடுத்து, தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கொரோனாவால் பாதியிலேயே நின்றுபோன ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் சபையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தலைமை தாங்கினார்.

இதில், கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை எங்கு நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவது என்று
கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் – ஒக்ரோபர் மாதங்களில் போட்டிகளை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here