பொலார்ட் மிரட்டல் – சென்னையை வென்றது மும்பை!

372

இறுதிப் பந்து வரை விறுவிறுப்பு ஏற்படுத்திய போட்டியில், பொலார்ட்டின் மிரட்டலான ஆட்டத்தால் 4 விக் கெட்களால் சென்னையை வெற்றி கொண்டது மும்பை.

ஐ.பி.எல். இருபது – 20 தொடரில் நேற்றிரவு 27ஆவது போட்டி நடந்தது. இதில், சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டில்லியில் நடந்த இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சி யில் வென்ற மும்பை இந்தியன்ஸின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு கெயிக் வாட், டூ பிளசிஸ் இணை தொடக்கம் கொடுத்தது.

கெயிக் வாட் ஒரேஒரு பௌண்ட்ரியை மட்டும் அடித்து போல்ட்டின் பந்தில் ஹார்திக் பாண்ட்யாவி டம் பிடி கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய பிளசிஸூடன் இணைந்த மொயின் அலி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

36 பந்துகளில் 5 பௌண்ட்ரிகள், 5 சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்ட மொயின் அலி 58 ஓட்டங்களைக் குவித்து பும்ராவின் பந்தில் விக்கெட் காப்பாளர் டி கொக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து 28 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பௌண்ட்ரிகளுடன் அரைச்சதம் தொட்ட டூ பிளசிஸ், பொலார்ட்டின் பந்தில் பும்ராவிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 2 ஓட் டங்களுடன் நடையைக் கட்டினார்.

அடுத்து இணைந்த அம்பதி ராயுடு – ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராயுடு அதிரடி காட்ட, மறுமுனையில் ஜடேஜா நிதானம் காட்டி னார்.

20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 218 ஓட்டங்களை குவித்தது சென்னை சுப்பர் கிங்ஸ்.

27 பந்துகளில் 7 சிக்ஸர்களையும், 4 பௌண்ட்ரிகளையும் விளாசி ராயுடு 72 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 2 பௌண்ட்ரிகள் 22 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பையின் சார்பில் பந்துவீசிய கிரன் பொலார்ட் 2 விக்கெட்களையும், போல்ட், பும்ரா ஒவ்வொரு விக் கெட்டையும் வீழ்த்தினர்.

219 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை விரட்ட ஆரம் பித்தது மும்பை இந்தியன்ஸ்.

தொடக்கம் கொடுத்த டி கொக் 4 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 38 ஓட்டங்களையும், ரோஹித் சர்மாவும் 4 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 35 ஓட்டங்களை யும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சூரியகுமார் யாதவ் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த குர்னல் பாண்ட்யா 2 சிக்ஸர்கள், 2 பௌண்ட்ரிகளுடன் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந் தார்.

அடுத்து வந்த கிரன் பொலார்ட் அதிரடியில் மிரட்டினார்.

17 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 171 ஓட்டங்கள் என்ற சற்றுக் கடினமான நிலையில் இருந் தது மும்பை இந்தியன்ஸ். ஆனால், கிரன் பொலார்ட்டின் ஆட்டம் மும்பை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அவருக்கு துணையாக ஹார்திக் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

18ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்ட்ரியை பொலார்ட் விளாச, அந்த ஓவரில் இருவரும் 17 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று மும்பைக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

19ஆவது ஓவரின் முதல் இரு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்க விட்டார் ஹார்திக் பாண்ட்யா. மூன்றாவது பந்தில் இரு ஓட்டங்களை எடுத்தவர், நான்காவது பந்தில், 16 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நீசம் ஓட்டம் எதையும் பெறாமலே 19ஆவது ஓவரின் இறுதிப்பந்தில் வீழ்ந்தார்.

எனினும் அந்த ஓவரில் 15 ஓட்டங்களை எடுத்தமையால், இறுதி ஓவரில் 16 ஓவர்களை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

நிகிடி வீசிய இறுதி ஓவரை எதிர்கொண்டார் கிரன் பொலார்ட். முதல் பந்து முழுஅளவு பந்தாக தாழ்ந்து வந்தது (Low full toss). அதைத் தடுத்து ஆடினார் பொலர்ட்.

மிடில் யோர்க்கராக வீசப்பட்ட இரண்டாவது பந்தை பௌண்ட்ரிக்கு விரட்டிய பொலார்ட், மூன்றாவது பந்திலும் பௌண்ட்ரி அடித்தார்.

நான்காவது பந்தையும் நிகிடி மீண்டும் முழுஅளவு பந்தாக வீசினார். அந்தப் பந்தையும் தடுத்தே ஆடினார் பொலார்ட். இதனால், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது.

ஆனால், அடுத் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்ட பொலார்ட் அவர் களுக்கு பெருமகிழ்ச்சியைக் கொடுத்தார். அடுத்த இறுதிப் பந்தில் 2 ஓட்டங்களை எடுத்து மும்பை அணிக்கு வெற்றியைக் கொடுத்தார் பொலார்ட்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்களால் சென்னையை வெற்றி கொண்டது. பொலார்ட் 8 சிக்ஸர் களையும், 6 பௌண்ட்ரிகளையும் விளாசி 34 பந்துகளில் 87 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார்.

சென்னையின் பந்து வீச்சில் சாம்கரன் 3 விக்கெட்களையும், தாகூர், ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக 87 ஓட்டங்களை குவித்ததுடன் இரு விக்கெட்களையும் கைப்பற்றிய கிரன் பொலார்ட் தெரிவானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here