நீடிக்கப்பட்ட ஊரடங்கினால் கொரோனா தமிழகத்தில் ஓரளவுக்கு குறைந்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு

806

தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தளர்வுகளற்ற
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 7 ஆம் திகதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகுறைந்து வந்தாலும்இ கோவையில் கொரோனா தொற்று பரவல் கவலை அளிக்கும்விதமாக உள்ளது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு
செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை சென்றார்.

இது குறித்த அறிக்கை ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதில் கடந்த ஒருவார ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை ஓரளவு குறைந்து
வருகிறது.

மேலும் குறைந்திடவே ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here