வேட்பாளருக்கு 13 கோடி ரூபாய் செலவு பேச மறுத்தார் பா.ஜ.க மகளிர் தலைவி

825

”தமிழகத்தில் பா.ஜனதாவின் ஒரு வேட்பாளருக்கு ரூ.13 கோடி செலவு தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை” என்று ஊடகவியலாளர் களுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்து பா.ஜனதா தேசிய மகளிர் அணிதலைவி வானதி சீனிவாசன் நழுவிச் சென்றுள்ளார்.

கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்ததார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு கோவையில் மிக அதிவேகமாக கொரோனா தொற்றுபரவுகிறது.

எனினும், கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு, முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

ஊரடங்கு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பும் போது அனைவருமே தடுப்பூசி போட்டுள்ளோம் என்ற நிலை வரவேண்டும்.

உலகிலேயேமிகவும் குறைவான விலையில் நம் நாட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக
கொடுக்கப்படுகிறது.

மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழு, மாநில அளவில் வழங்கப்படும் தடுப்பூசி குறித்து கண்காணித்து வருகிறது. சென்னை பத்ம சேஷாத்திரிபள்ளி பாலியல் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரம் பட்சம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு தலா ரூ.13 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்திடம் முழுமையாக கணக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது” என வானதி சீனிவாசன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here