பரோலில் வந்துள்ள பேரறிவாளனை சந்திப்பதற்கு யாரும் வரவேண்டாம்! பொலிஸார் எச்சரிக்கை

426

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்குப் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் அவரை சந்திப்பதற்கு யாரும் வரக்கூடாது என பொலிஸார் கடும் உத்தரவு போட்டுள்ளார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி நேற்று முன் தினம் சென்னை புழல் ஜெயிலில் இருந்து பொலிஸ் பாதுகாப் புடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறி வாளன் அழைத்து வரப்பட்டார்.

அவரது தாய் அற்புதம்மாள் வர வேற்றார். ஒரு மாதம் பரோ லில் வந்த பேரறிவா ளன், தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் எனவும் வீட்டில் தான் தாயார் அற்புதம்மாள் உடன் இருப்பதாக கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் டி.எஸ்.பி. பிரவீன்குமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 6 எஸ்.ஐ.க்கள் என 30-க்கும் மேற்பட்ட பொலிசார் பேரறிவாளன் வீட்டுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பேரறிவாளன் பரோல் காலம் முடியும் வரை வீட்டில் இருந்து தினமும் ஜோலார்பேட்டை பொலிஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும்.

ஆனால் பேரறிவாளன் பாதுகாப்பு கருதி அவரது வீட்டிலேயே தினமும் கையெழுத்து வாங்கப்படும் என பொலிஸார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here