பொது முடக்கம் மட்டுமே இந்தியாவுக்கான தீர்வு; அமெரிக்க மருத்துவ நிபுணர் பெளஸி வலியுறுத்து

462

“கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து தப்பிக்க அடுத்த சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை
இந்தியா அறிவிக்க வேண்டும்!” என்று அமெரிக்காவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் அன்ரனி
பெளஸி அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை உலகமே அதிர்ச்சியோடு கவனித்துக்
கொண்டிருக்கிறது.

ஒக்சிஜன் பற்றாக்குறை மிக அதிகளவு இருப்பதைத் தொடர்ந்து, பல நாடுகள் இந்தியாவுக்கு விமானம் மூலம்
மருத்துவ உதவிகளையும் ஒக்சி ஜனையும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு சில நாடுகள் நிதி உதவியும் வழங்கி வருகின்றன.

அமெரிக்காவின் மூத்த தொற்று நோயியல் நிபுணர் அன்ரனி பெளஸி அளித்திருக்கும் பேட்டியயான்றில் இந்தியா இப்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இப்படியான சூழலில், உடனடித் தீர்வு என்ன வென்பதையே இந்தியா பார்க்க வேண்டும். அந்த உடனடித் தீர்வு,
பொது முடக்கம்தான். சில வாரங்களுக்காவது இந்தியா பொது முடக்கத்தில் இருக்க வேண்டும்.

யாருக்குமே நாடு தழுவிய முழு பொதுமுடக்கம் என்பது ஏற்கமுடியாத வியம்தான். ஆனால், இப்போதைய
சூழலில் அதுமட்டுமே மிகச்சிறந்த பலனைத் தரும். இந்தப் பொது முடக்கத்தை ஆறு மாதங்கள் வரை முழு
வதுமாக நீட்டிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

அடுத்த சில வாரங்களுக்குப் பொது முடக்கத்தை அமல்படுத்தினால் போதும். சிறிது சூழல் சரியான பின்னர் அந்த முடக்கத்தை தளர்த்திக்கொண்டு செயல்படத் தொடங்கலாம்.

இதனால் கொரோனா பரவுதலும் தடுக்கப்படும் பொருளாதார பின்னடைவும் ஓரளவு தவிர்க்கப்படும்.

அதை விட்டுவிட்டு, இந்தியாவில் கொரோனா ஒழிந்து விட்டது என அறிவிப்பது அவசரத் தில் செய்யும் செயல் எனக் கூறி யுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here