தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி; புதிய முதல்வராகின்றார் ஸ்டாலின்!

398

தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகி முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில், மாலை 5 மணி வரையிலான முடிவுகளின்படி 156 தொகுதிகளைக் கைப்பற்றி தி.மு.க. கூட்டணி முன்னணி வகிக்கின்றது. அ.தி.மு.க. கூட்டணி 78 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

தமிழகத் தேர்தல் முடிவுகளில் நேரடியாகத் தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால், அது பற்றிநாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரையில் இலங்கை எமது தாய்நாடு. இந்தியத்தமிழகம் எங்கள் தந்தையர் நாடு.

அறிஞர் அண்ணா உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞர் முத்துவேலு கருணாநிதி வளர்த்து விட்டதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வளர்த்துவிட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் இடையில்தான் ஆரம்பத்தில் இருந்தே பிரதான போட்டி.

ஏனைய அனைத்து கட்சிகளும்துணை அரசியல் பாத்திரங்களையே வகிக்கின்றன.

தமிழக உடன் பிறப்புகள் தரும் ஜனநாயக முடிவுகளை ஏற்று அதை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே, இலங்கையில் நாம் கணிக்க வேண்டும்.

மற்றபடி, தேர்தல் காலத்திலும் சரி, இன்றைய முடிவுகளின் போதும் சரி, தமிழக அரசியல் கட்சிகளை பற்றி, தமிழக அரசியல் தலைவர்களை பற்றி, தரக் குறைவாக பண்பற்று பேசி எமது உணர்வுகளை நாம் கொட்டக்கூடாது.

அப்படி ஆத்திரப்படும் அளவுக்கு, நமது நாட்டு தமிழ் அரசியல் தலைமைகளும், வரலாறு முழுக்க ஏதோ பிழையே செய்யாத அதி உத்தம யோக்கியர்களுமல்ல என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும். இந்தியா தொடர்பில் நமது
கட்சிகள், அமைப்புகள் பல தவறுகளை வரலாற்றில் செய்துள்ளன.

இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சினை என்பது, தமிழக மக்கள் முன்னாலே உள்ள பல்வேறு பிரச்சி னைகளில் ஒன்றாகும். அங்கு வாழும்சுமார் எட்டு கோடி தமிழர், எமது உடன்பிறப்புகள்.

அந்த எட்டுக் கோடி என்பது எமது பாதுகாப்புக் கவசம். கடந்த காலங்களில் அந்த பாதுகாப்புக் கவசம் சரியாகப் பயன்படாமல் போய்விட்டது. இதற்கான காரணங்கள் பல. அவற்றை ஆராய்வது இப்போது உசிதமானதல்ல.

ஆகவே, கடந்த காலங்களை மறந்து விட்டு, தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும் வாழ்த்தி வரவேற்போம் என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here