உலகப் பெருந்தொற்றால் முடக்கப்பட்ட நாட்டை திறந்து விட வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது.
ஐ.நா பொதுச்சபை அமர்வு, மனித உரிமைகள் பேரவை அமர்வு போன்றவற்றின் காலப்பகுதிக்குள் நாட்டை முடக்கியமை நாடு முழுவதிலும் ஈழத் தமிழர்களின் பிரதிபலிப்புக்களை தவிர்த்திருந்தது.
கூட்டம் கூடினால் வேறெந்த பிரச்சினையும் இல்லை, தனிமைப்படுத்தல் சட்டம் பாயும் அவ்வளவு தான்.
இதே நிலைதான் ஆதரித்து அரசேற்றிய பெரும்பான்மையின மக்களுக்கும், ஆம், விலைவாசி ஏற்றம், பொருட் தட்டுப்பாடு போன்றவற்றுக்கு எதிரான பிரதிபலிப்புகளையும் தொழிற்சங்கங்களின் பிரதிபலிப்புக்களையும் தவிர்க்க லொக்டவுண் பெரிதும் கை கொடுத்தது.
தற்போது அடுத்த வியூகமாக மீண்டும் பயங்கரவாதத்தாக்குதல் நிகழ்த்தப்படக்கூடும் என வதந்திகளைப் பரப்புவதும், தேவாலயங்களுக்கு காவல் போடுவதும், பின்னர் போலித் தகவல் என்பதுமாக ஒரு அமைதியீனத்தை மெயின்ரெயின் பண்ணி வருகின்றார்கள்.
இதன் மூலம் நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தேவைப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கம் வெற்றியளிப்பதுடன் நாட்டின் இன்னொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களை மெலினப்படுத்தவும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றனர் எனும் எண்ணமும் மேலிடுகிறது.
நாட்டு மக்களிடையே இனவிரோதம் பேணப்படுத்தப்பட்டாலே சில விடயங்களை ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்த முடியும்.
அதற்காக திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை நெறியாள்கை செய்து வருவதுடன் அதை சமூக வலைத்தளங்களூடாக மக்கள் மட்டத்தில் கொண்டு சென்று திசைதிருப்பும் செயற்பாடும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
மக்கள் உணராத வரையில் ஆட்சியாளர்களின் ஆட்டம் ஓயாது.