ஒக்டோபர் வரை மிகக் கடுமையான ஊரடங்காம்…

415

முதல் இரு வாரங்களும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஆதலால் மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வீதியெங்கும் திறந்திருந்தன.

மூன்றாம் நான்காம் வாரங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட பெரும்பாலான மக்கள் கூடும் இடங்கள் – உணவகங்கள், பலசரக்கு கடைகள், தெருமுனைகள், சந்தடிகள் எங்கும் மக்களை காண முடிந்தது.

பொதுப் போக்குவரத்து, பிடவைக்கடைகள் தவிர ஏனைய பல இடங்களில் மக்களின் பிரசன்னம் இருந்தது.

தற்போது மிகக்கடுமையான ஊரடங்கு ஒக்டோபர் வரை நீடிக்கப்பட்டதுடன் மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.

எனவே இம் மிகக்கடுமையான ஊரடங்கு காலத்தில் நாடு வழமைக்குத் திரும்பி விடும் போலும்.

சட்டம் அமுலாக்கப்பட்டிருக்கிறது.
சட்டத்தை மதிப்பவர்கள் மட்டும் வெளியே திரியத்தேவையில்லை. என்பது தான் ஊரடங்கின் நோக்கம் போலும்.

இலங்கையின் தற்போதைய சூழலில் ஊரடங்கும் பொருத்தமில்லைத்தான்.

ஏனெனில் கொரோனா எல்லாஇடங்களிலும் பரவிவிட்டது.

நஞ்சுண்டு இறந்தவருக்கும் கொரோனா. நாய் கடிச்சு செத்தவருக்கும் கொரோனா.

ஆள் அடிச்சு செத்தவருக்கும் கொரோனா. வாள்வெட்டில் செத்தவருக்கும் கொரோனா.

விபத்தில் செத்தவருக்கும் கொரோனா.

வீட்டில செத்தவருக்கும் கொரோனா. ஆக, பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் நிச்சயம் 80%ற்கும் மேல் கொரோனா பொசிட்டிவ் தான்.

ஆதலால் மக்களின் நடமாட்டத்தை குறைத்தல் என்பது மேலும் பரவுதலைக் குறைக்கும் என்று நம்பினால், அதான் பரவி விட்டதே என்றாலும் மிகையில்லை.

ஊரடங்கு ஒரு புறம் இருக்கட்டும், ஊசி போட்டவர்கள் மட்டும்தான் நடமாடலாம். அதுவும் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் என்றால் ஓரளவு பிரயாசப்படும் போலும்.

எதுவாயினும் அடுத்த கிழமை திருவிழாத்தான். சனக்கூட்டம் அள்ளப் போகுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here