ஐ.நா கூட்டத் தொடரை ஏமாற்றும் இராஜினாமா நாடகம்

362

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே போதையில் (இன, மது) கடந்த 12ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றது மட்டுமல்லாது அங்கு இருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரை மண்டியிட வைத்து தனது பிரத்தியேக துப்பாக்கியால் இப்போதே கொன்று விடுவேன் என்று மிரட்டிய பின் தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் சூழலில் சிறைச்சாலையில் நடந்த சம்பவம் சிங்கள ஆட்சியாளர்களின் மனநோயை பட்டவர்த்தனமாக காண்பித்துள்ளது.

அதேவேளை கூட்டத்தொடர் காலத்தில் ஐ.நா மனித உரிமை பேரவையை பேய்க்காட்டும் இராஜினாமா நாடகமும் வலிந்து நோக்கப்படவேண்டியது. இராஜினாமா கடிதம் கொடுத்ததன் மூலம் குற்றத்தை விளங்கிக் கொண்டதாக குறித்த அரசியல்வாதி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அதற்காக அவர் மனந்திருந்திவிட்டார் என்று பொருள் கொண்டால் அதைவிட முட்டாள் தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

ஏனெனில் இந்த நாட்டில் குற்றவாளிகள் அரசியல் செல்வாக்கு அல்லது ஆளுங்கட்சி செல்வாக்கு உள்ளவராயின் அவர் குற்றமற்றவர் என்பது எழுதாவிதி. அதற்கு அண்மித்த சான்று கொலைக்குற்றவாளி துமிந்தவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு.

குறித்த பேரினவாதியை காப்பாற்றும் முயற்சியுடன் கூடிய ஐ.நாவை ஏமாற்றும் முயற்சியே இவ் இராஜினாமா நாடகம்.

ஒரு கல்லில் இரு மாங்காய் எனும் தியறி ஊடாக குறித்த அரசியல்வாதியை தண்டிக்கும் எண்ணம் ஏற்படாதவண்ணம் தடுத்ததோடு மட்டுமல்லாமல் மனித உரிமை பேரவையில் தற்போது இலங்கைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிருப்தியும் கச்சிதமாக அரச தரப்பால் கையாளப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் நல்லது.

மேலும் அவர் இராஜினாமா கடிதம் சமர்ப்பித்த பின் தெரிவித்த “அரசுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் தடுக்க விரும்புவதாக” எனும் கூற்றை நன்கு விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here