தமிழர்களை அறிவிலிகளாக நினைக்கும் தமிழ் அரசியல்வாதிகள்…

343

ஒருவர் அப்படியில்லை என்கிறார்.
ஒருவர் அப்படி அவர்கள் செய்துவிட்டு அது இப்படித்தான் என்று சொல்வார்கள் என்கிறார்.
ஒருவர் எம்மோடு கலந்துரையாடாமலே பிரேரணை தாயாரித்து விட்டார்கள் என்கிறார்கள்.
ஒருவர் முன்னாள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக என்னைத் தூண்டிவிட்டார்கள் என்கிறார்.

ஆக சுயபுத்தியில்லாதவர், கட்சிக்கட்டுப்பாடுகளுக்கு அடங்காதவர், நல்லதை துணிந்து சொல்லும் திராணியற்றவர், பிறரை மதித்து ஒன்றிணைத்து கூட்டாக செயற்படமாட்டாதவர், தன்னிலை அறியாதர், ஏமாற்றுவதில் வல்லவர் என்று தமிழர்களின் நிலைமையை சீர் செய்ய பொருத்தமில்லாத பிரதிநிதிகளை தெரிவு செய்து விட்டோமோ என்று வெட்கிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

இந்த பிரதிநிதிகள் தொடர்ந்தும் தமிழர்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்துடன் அரசியல் செய்கின்றனர்.

இம்முறை பிரதிநிதித்துவம் கிடைக்காதவர்கள் வஞ்சம் தீர்க்கின்றனர்.

ஆக, தமிழ் அரசியல்வாதிகள் எவரும் ஆரோக்கியமான அரசியல் செய்பவர்களாக தெரியவில்லை.

அவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் ஏமாளிகள்.

சரிதானே, “சிங்கக் குருளைக்கு இடும் தீம் சுவை ஊனை வெங்கண் நாயின் சிறுகுட்டனுக்கு ஊட்ட விரும்பிய ” நாம் ஏமாளிகளாய்த்தான் இருப்போம் என்று இந்தக் கூத்தாடிகள் நினைத்தாலும் அதிசயமில்லை.

அரசியல் அறம்பிழைக்கும் இவர்களை தெரிவு செய்த நாம் அறிவிலிகளாய்த்தான் இருப்போம் என்று தற்போதைய பிரதிநிதிகளும், புறக்கணித்ததால் வஞ்சம் தீர்ப்போரும் எண்ணக்கூடும்.

நாம் யார்?
எங்கு நிற்கிறோம்?
எமக்கு என்ன நடந்தது?
எவ்வாறு துன்புறுத்தப்பட்டோம்?
எமக்காக யார் யாரெல்லாம் தியாகம் செய்தார்கள்?
அவர்களின் எதிர்பார்ப்புகள் என்னவாயிருந்தன?

இவற்றிற்கெல்லாம் விடை தர இயலாத அற்பர்கள் இவர்களை அங்கீகரித்த நாம் அறிவிலிகள் தாம்.

என்ன செய்வது? ஏமாறுகிறோம் என்று தெரிந்திருந்தும் வறட்டுக் கெளரவத்திற்காய் உங்களை ஆதரிக்கவேண்டிய கொடுஞ்சூழல் நம்மை சூழ்ந்துள்ளதே!

கேட்பாரற்ற அநாதைகளானோம் உங்கள் பங்கிற்கும் குட்டுங்கள். குனிகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here