ஒரே வீட்டில் இரு மரணங்கள் நிகழ்கின்ற நிலையும் உருவாகிவிட்டது. ஆனால் எமக்குள்ளே கொரோனா வரும் வரை பயம் இருப்பதாக தெரியவில்லை. அத்தியாவசிய தேவைக்காக வெளியில் நடமாடுபவர்களை தவிரவும் பலர் தெருக்களில் திரிகின்றனர்.
அவர்களது கேள்வி முன்னுக்கு மறிக்கிறாங்களோ? என்று அமைகிறது. எனக்கு முன்னால் ஒருவர் சென்று கொண்டிருந்தார். நானும் அவரும் ஒரே திசையில் பயணித்தோம்.
இன்னொருவர் எதிர்த்திசையில் வந்தார். வந்தவரை எனக்கு முன்னால் போனவர் சந்தியில மறிக்கிறாங்களோ? என்று கேட்டார்.
முன்னால் வந்தவர் விசாரிக்கிறாங்கள் என்று சொன்னார். என்ன மாதிரி U ரேர்ன் அடிச்சாரோ தெரியவில்லை. மனுஷன் வந்ததிசையிலேயே திரும்பி போய்ட்டார்.
எனது முறை வந்தது. சந்தியில் உரிய அடையாள அட்டையை பார்த்ததும் எதுவும் சொல்லவில்லை. ஆக, சில பேர் பெருமைக்காக தெருவில் இறங்குகிறார்கள். அதை பெரிதாக மற்றையவர்களுக்கு தம்பட்டம் அடிப்பதற்காகவே திரிகிறார்கள். வேறொன்றுமில்லை.
நிச்சயம் எங்கிருந்தோ கொரோனாவை கொண்டு சென்று வீட்டில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்தளித்து தாமும் நொந்து பிறரையும் சாகடித்து நினைத்ததை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள்.
அத்தகைய அன்பர்களுக்கு பணிவான வேண்டுகோள், கொரோனாத்தொற்றிலிருந்து மீண்டவரிடம் அவரது அனுவத்தை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.
செய்திகளை அடிக்கடி பாருங்கள், கேளுங்கள். தெருவால் உலாத்தும் போது படலைகளை பாருங்கள். அப்போது புரியும் எத்தனை வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று பாருங்கள். ஞானம் பிறக்க வாய்ப்புண்டு.