செக்கிழுத்த செம்மல் போல் நினைவு கூரத்தக் கோர் நம்மத்தியில் யாருளர்?

549

கப்பலோட்டிய தமிழனின் 150வது பிறந்தநாள் நினைவுகளில் தமிழகம் உள்ளத்தால் உருகுகிறது. தமிழக முதல்வர் பல விடயங்களை வ.உ.சி ஐயா நினைவாக செயற்படுத்த திட்டம் வகுத்துள்ளார்.

இவை ஏன்? எதனால்? என்று சிந்தித்தால் வ.உ.சி அவர்களது நாட்டிற்கான அர்ப்பணிப்பு அத்தகையது. உலகே வியந்த கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கைதாகி ஆங்கிலேயர்களால் சிறைவாசம் அனுபவித்தார். அங்கு செக்கிழுத்தார்.

தன் இறுதிக்காலத்தில் வறுமை நிலையில் வாழ்ந்து இறைபதம் அடைந்தார்.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்” என்ற வள்ளுவர் வாக்கிற்கமைய பாரத விடுதலைக்காய் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து முன்னதாரணமாய் அமைந்து அரிதான, எளிதற்ற காரியங்களை செய்த வ.வு.சி ஐயாவின் புகழ் இன்னமும் பேசப்படுவது போல் நம்நாட்டில் அந்தளவில் போற்றப்படும் சுதந்திர போராட்ட வீரர் யாரேனும் உள்ளர்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

தற்போதைய ஆட்சியாளர்களும் புகழ்ந்து அவர் நினைவாக கருமங்கள் ஆற்றுமளவுக்கு செயற்படுகிறார்கள் என்றால் வ.உ.சிதம்பரனார் அவர்களின் அர்ப்பணிப்பு எப்பேற்பட்டது என்பதை யாவரும் அறிவர்.

நம் நாட்டில் இத்தகைய தியாகிகள் இல்லை. தியாகிகளால் நமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் தானோ தெரியவில்லை.

நாம் நம் முன்னோர்களை எண்ணுவதுமில்லை. இந்த நாட்டில் விசுவாசம் கொண்டு ஆள்வதுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here