ஒலிம்பிக்கில் ஈழத்தமிழா்கள் இடம்பெறல் வேண்டும்

723

205 நாடுகள் வரையில் பங்கு பெறும் ஒலிம்பிக் விளையாட்டில் 33 வகைகளில் 339 போட்டிகள் உள்ளன.

தற்போது ஐப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் நிகழ்வுகளில் இலங்கையும் பங்குகொள்கிறது.

ஆண்களுக்கான 100 மீற்றா், பெண்களுக்கான 800 மீற்றா், நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் இலங்கை வீரா்கள் களமாடிவருகின்றனா்.

ஆனால் இலங்கையிலிருந்து ஒலிம்பிக்கில் பங்குபற்ற அனுப்பப்படும் வீரா்களில் தமிழ்மொழி பேசுவோா் அரிது.

1952இல் கெல்சிங்கிலும் 1956 ல் மெல்போா்ன் இலும் இடம்பெற்ற ஒலிம்பிக்கில் பங்குபற்றிய ஒலிம்பிக் தமிழன் கலாநிதி. நாகலிங்கம் எதிா்வீரசிங்கம் எனும் விளையாட்டு வீரா் போல் பலா் இன்றும் நம் நாட்டில் இலைமறைகாய்களாய் உள்ளனா்.

அவா்களை தேடி ஊக்கப்படுத்துவதன் மூலம் மேற்படி சொல்லப்பட்ட போட்டிகளில் கணிசமான போட்டிகளில் நம் நாட்டின் இனபேதமற்ற வீரா்குழாத்தை களமிறக்கி அதிக பதக்கங்களை பெற முயற்சி செய்யமுடியும்.

பாடசாலை மட்டங்களில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதன் மூலமும் பாகுபாடின்றிய தோ்வுகளை நடத்துவதன் மூலமும் நாட்டிற்கு பெருமை சோ்க்கும் வகையில் வீரா்களை ஒலிம்பிக்கிற்கு அனுப்பமுடியும்.

18 தடவைகள் வரையில் இலங்கை ஒலிம்பிக் இல் பங்கு பற்றிய போதும் இன்றுவரை வெறும் 07 விளையாட்டுக்களில் 09 வீரா்கள் மட்டுமே களமாடுகின்றனா்.

அதேபோல் இதுவரை இரண்டே இரண்டு வெள்ளிப் பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது.

ஆகவே பங்குபற்றும் விளையாட்டுக்களின் எண்ணிக்கைகளையும் வீரா்களின் எண்ணிக்கையினையும் அதிகப்படுத்துவதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கக்கூடிய கௌரவத்தினை, பதக்கங்களை அதிகப்படுத்த முடியும் என்பது நமது பேரவா.

அதிலும் தமிழ் பேசும் மக்கள் மூலமாகவும் குறித்த கௌரவம் இலங்கை நாட்டிற்கு கிடைக்க வேண்டும் என்பதும் நமது பேரவாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here