இவர்கள் பொருத்தமற்றவர்கள்

718

இலங்கை ஒரு பல்லின, பன்மத நாடு. இத்தகைய நாட்டில் சாந்தியும் சமாதான மும் நிலைக்க வேண்டுமாயின் ஆட்சியாளர் கள் சமநிலை வாதமுடையவர்களாக இருக்க வேண்டுமே தவிர இனவாத, மதவாத போக் குடையவர்கள் ஆயின் நாடு நிதமும் சபிக் கப்பட்ட நாடாகவே மிளிரும்.

இன நல்லிணக்கம் இன்மையினால் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பிற்பாடு எதிர்நோக்கிய உள்நாட்டுப் பூசல்களால் அனுபவித்த கசப்பான அனுபவங்கள் கற்றுத் தெளிய வேண்டியவை.

ஒரு பௌத்த மதப் பின்னணி கொண்ட ஆட்சியாளர்களால் நிருவகிக்கப்படுகின்ற நாட்டில் சமதர்மம் நிலையாமை என்பது பௌத் தத்தில் சொல்லப்பட்டுள்ள கருத் துக்களின் பால் இவர்தம் ஈடுபாடு தொடர்பில் சந்தே கத்தை ஏற்படுத்துகிறது.

“அன்பே தெய்வம் – யாரும் தீமை செய்தாலும் நன்மை செய்யுங்கள்” போன்ற அறக் கருத்துக்களைப் பின்பற்றுகின்ற பௌத் தர்களாக பௌத்த ஆட்சியாளர்கள் இல்லை.

இவர்கள் சிறுபான்மை இனத்தவர்களை மெலினப்படுத்துவதற்தாக நிலபுல, வாழ்வியல் அடக்குமுறைகளை அரங்கேற்று வதன் மூலம் பௌத்த சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் தம்மை பௌத்த தலைவர்களாக நிரூபிக்கவே அதீத அக்கறை கொள்கின்றனர்.

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் காலத் திலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்தாபகர் காலத்திலும் ஏற்பட்ட கசப்பான அனு பவங்களை மீளவும் இவர்கள் தொடர்
கின்றனர்.

இவர்கள் சபையில் கௌதம புத்தபிரானின் சீடர்களைத் தவிர்த்து காவியணிந்த காடையர்களே உள்ளனர்.

தவிர இவர்களது அமைச்சரவையில் துரியோதன சேனையினரே அங்கம் வகிக்கின்றனர்.

ஆதலால் அசோகச் சக்கரவர்த்தியின் மனதை மாற்றிய பௌத்தத்தை பின்பற்றுவோராக இப்போதைய ஆட்சியார்கள் இல்லை. ஏழு தசாப்த காலமாக இலங்கை தன் மக்கள் மத்தியில் ஆரோக்கியமற்ற சல
சலப்புகளை மட்டுமே கண்டு வருகிறது.

ஏற்றத்தாழ்வுகளை மேற்கோள் காட்டும் ஆட்சியாளர் தான் இதற்கு முழுப்பொறுப்பும்.

அதிலும் தற்போதையவர்கள் எல்லோ ருக்கும் ஒருபடி மேல் சென்று தமது துவேசத்தனத்தை பகிரங்கப்படுத்துகின்றனர். இவ் வல்லாதிக்கத்தால் வாக்குகளை தக்கவைப் பது பொருத்தமான உத்தி என்பது அவர் களது அரசியல் வியூகம் என்பது தௌ;ளத் தெளிவு. ஆதலால் இலங்கையை நிருவகிக்க இவர்கள் பொருத்தமற்றவர்கள்.

சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதில் அக்கறை கொண்டு இலங்கை நாட்டை ஏமாற்றுகின்றனர்.

இதனால் இதர நாடுகளுக்கு இணையான நாட்டின் வளர்ச்சி ஸ்தம்பிக்கப்பட்டு நாடு பின்னடைவை எதிர்
கொள்கிறது.

இதனை பெரும்பான்மை மக்களும் உணரத் தலைப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here