இலங்கைத் தமிழா் விவகாரத்தில் தொடா்ந்தும் பூச்சாண்டி காட்டும் இந்தியா

688

உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து பிரதமா் இந்திராகாந்தி முதல் மோடிவரையான ஆட்சியாளா்கள் இலங்கைத் தமிழா்கள் விவகாரத்தில் தொடா்ந்தும் பூச்சாண்டி காட்டிவருகிறது என்பதே உண்மை.

ஆரம்ப காலங்களில் உரிமைப் போராட்டக்குழுக்களுக்கு பயிற்சி முதல் ஆயுதம் வரை வழங்கி உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல் இறுதியுத்தத்தில் விடுதலைப் போராட்டத்தை முடக்கியது வரை இந்தியாவின் பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல.

இலங்கையின் உள்விவகாரங்களில் ஒரு பெரியண்ணாவிற்கு இருக்கிற உரிமை போல அவ்வப்போது தலையிட்டு தனது வல்லாதிக்கத்தை முழுமையாக திணித்து வந்தது இந்தியா.

இலங்கையில் ஒரு குழப்பமான சூழலே இருக்க வேண்டும் என்பது இந்தியாவின் கொள்கைகளில் ஒன்று போலும்.

எந்தச்சந்தா்ப்பத்திலும் இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் தன்மையுள்ளதான இந்தியா ஈழத்தமிழா்களுக்கு நம்பிக்கையளித்தது போல் இதுவரை எதுவும் செய்யவில்லை.

இலங்கை அரசியலில் ஈழத்தமிழா்களிடம் கைவசம் இருந்ததென்னவோ மாகாணமுறை. அதனூடாக ஏதேனும் திருப்தி கிடைக்கும் என்றிருந்தால் மேற்போந்த வகையில் பிரதிநிதிகளை முன்னிறுத்தி கிடைக்கப்பெற்ற அதிகாரத்தின் மூலம் எதையும் செய்யமுடியாத அவையைத் தோற்றுவித்ததன்  பின்னணியில் இந்தியா இருந்தது.

தற்போது அந்தளவிலேனும் மாகாணசபை முறை இல்லை. ஆக தனது சுயநலத்தை முன்வைத்தே ஈழத்தமிழா்களின் விவகாரத்தில் தன்னை முன்னிறுத்துகிறது இந்தியா.

இலங்கையுடனான சீனாவின் சிநேகிதம் தொடா்பில் அதிருப்தியடைந்ததால் தற்போது இந்தியாவில் மீளவும் ஈழத்தமிழா் விவகாரக் கருசனை மாயையை உருவாக்கியுள்ளது.

ராஜ்யசபாவில் வை.கோவின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு இராஜாங்க அமைச்சா் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் என்பன தமிழருக்கு வழங்கப்படவேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக தெரிவித்திருக்கிறாா்.

அதாவது இலங்கை தனது கட்டுப்பாட்டில் இருந்து தவறும் போதெல்லாம் தமிழரை வைத்து பூச்சாண்டி காட்டுவதே!

இதுவரை ஐ.நா.மனித உரிமை பேரவையில் தமிழருக்காக குரல்கொடுக்காத இந்தியாவின் இராஜதந்திர கொள்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here