சுயசாா்பு பொருளாதாரத்தினூடாக வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படல் ஒன்றே தீா்வு

1007

நாட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டத்தில் தற்போதைய நிலைமை காணப்படுகிறது.

அரிசி, பருப்பு, மரக்கறிகள், கடலுணவு போன்றன கொள்வனவு செய்ய முடியாத விலை உயரத்தில் உள்ளன. சில பால்மாக்கள், விவசாயப் பொருட்கள் பாதுகக்கப்பட்டுவருகின்றன.

சதோசவால் கொண்டுவரப்படும் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்கள் ஒரே நாளில் தீா்ந்துவிடுகின்றன. எரிபொருட்கள் ஏற்கனவே அதிகரித்த விலையில் உள்ளன.

இறக்குமதியில் தடைக்கட்டுப்பாடு பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அதிகரிப்பையும், பாதுக்கலையும் ஏற்படுத்தி வருகின்றது.

இவ்வாறு செல்லுமாயின் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களின் நிலை மேலும் கவலைக்கிடமாகும். மத்தியதரவா்க்கத்தினரும் வறுமைக் கோட்டிற்குள் தள்ளப்படுவா்.

ஆகவே சுயசாா்புப் பொருளாதாரம் ஒன்றே இதிலிருந்து மக்களைமீட்க ஒரேதீா்வு. தமக்கு அன்றாடம் தேவைப்படும் உணவின் கணிசமான பகுதியையேனும் தாமே உற்பத்தி செய்வதுடன் அண்டை அயலருடன் பன்டை மாற்று முறையில் பொருட்களின் தட்டுப்பாட்டை நிவா்த்தி செய்வதன் மூலமே வாழ்வியலை நகா்த்தமுடியும்.

இவ்வாறு செல்வோமானால் பொருட்களைப் பதுக்கும் வியாபாரிகளுக்கும் பாடமாய் அமையும்.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ”சௌபாக்கியா” திட்டத்தை அதன் இலக்குகளின் பால் நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் நன்மை கிடைக்கும்.

ஆனால் இங்கு சிபாரிசு செய்யப்படும் திட்டங்கள் கடமைக்கு ஒப்பேற்றப்படுவதாகவே அமைகிறது.

”பாத்திரமறிந்து பிச்சையிடு” என்பாா்கள். தேவையின் தன்மை, செயற்படுதிறன் அடிப்படையில் ”சௌபாக்கியா”வை செயற்படுத்தல் அதிகாரிகளின் கடமை.

இல்லையேல் இதற்கு முந்திய வாழ்வாதார திட்டங்கள் போல் பயனற்று விடும் என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here