பல்லின நாடுகளில் அமைதி என்பது எட்டாக்கனி. இலங்கை மிகப்பெரிய உதாரணம். ஆப்கானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் கொள்கைப் பிரிவினை அந்நாட்டின் அமைதியை கூறுபோட்டது.
கடந்த நாட்களில் தலிபான்கள் ஆப்கானின் முக்கிய நகரங்களை தம்வசப்படுத்திய போது பல மக்கள் வெளியேறியதான செய்தி ஆப்கானில் மலரப்போகும் தலிபான்களின் ஆட்சி தொடர்பிலான அதிருப்தியை வெகுவாகப் புலப்படுத்துகிறது.
தற்போது தனக்கென்ன என்று அமெரிக்கப்படைகள் தலிபான்களுக்கு சாதகமான முடிவொன்றை எடுத்ததன் விளைவு ஆப்கான் மீளவும் அமைதியை குலைத்துள்ளது.
தற்போது மூன்று மாகாணங்களை தலிபான் எதிர் அமைப்பு கைப்பற்றியதான தகவலும் அமைதியின்மையை மேலும் உறுதிப்படுத்தி நிற்கிறது.
முன்னாள் அரசபடையினர் சிலரும் தலிபான் எதிர் தீவிரவாதிகளுமாக 6000 பேர் வரை ஒன்றிணைந்து தலிபான்கள் உருவாக்கும் அரசை எதிர்க்க முனைவது தொடர் இரத்த ஆறை ஓடச் செய்யவே என்பது தெள்ளத் தெளிவாகிறது.
சரி பிழை என்பதற்கப்பால் காலமெல்லாம் கண்ணீரும் கம்பலையுமாய், நிம்மதியற்றதான வாழ்வே ஆப்கானின் தலையெழுத்தானதுவோ?. எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.