சிந்திக்காத செயல் கெடும்

496

உரிய நேரத்தில் உரிய திட்டமிடல் இல்லை எனில் விளைவுகள் பாரதூரமாக மாறிவிடும். ஆப்கானில் அமெரிக்கப்படைகளின் வெளியேற்றம் பல்லாயிரம் ஆப்கான் மக்களை வெளியேற்றுகிறது.

முழுமையாக முதலமைச்சர் ஸ்ராலின் ஆல் முடக்கப்பட்ட தமிழ்நாடு தற்போது திரையரங்குகளை திறக்க அனுமதித்துள்ளது.

முடிவுகளின் திறன் என்பது ஆய்வினைப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக முடிவின் திறன் முடிவில் தான் தெரியும்.

எடுக்கப்பட்ட முடிவு சரியா? தவறா? என்று. சுகாதாரத்தரப்பால் எதிர்க்கட்சிகளால் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் முடக்கப்படாத நாடு பௌத்த பீடங்களின் கோரிக்கையை அடுத்து முடக்கப்பட்டுள்ளது.

தேரர்களின் வேண்டுகோளைச் செவிமடுத்தே நாடு முடக்கப்பட்டதாக அதிமேதகு ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார். எது எப்படியோ, இம்முடிவின் திறன் எத்தகையது என்பதனை பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சுகாதாரத் தரப்பினர் தனியே பெருந்தொற்றை மட்டுமே சிந்திப்பதாகவும் ஒரு அரசாங்கமாக பல விடயங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றையும் பார்க்க நாடொன்றின் முதுகெலும்பு என்பது மக்கள் மட்டும்தான். மற்ற வளங்கள் அவயவங்கள் போன்றவை. முதுகெலும்பு திட மற்றுப் போனால் அவயவங்கள் இருந்தென்னபயன்.

ஆட்சியாளர்கள் மட்டும் அனுபவிக்க வேண்டியது தான். பாகுபலி படத்தில் காலகேயர்கள் மகிழ்மதி மக்களை சிறைபிடித்து பணயக்கைதிகளாக நிறுத்தி வைப்பர்.

முன்னேறிச் செல்லும் பல் வார்த்தேவன் அம்மக்களை தனது சுழல்கத்தி பூட்டிய இரதம் கொண்டு வெட்டிவீழ்த்தி முன்னேறுவார்.

பாகுபலியோ அவர்களைக் காப்பாற்றி காலகேயகூட்டத்தை வெல்வார். சினிமாப்பாணியாயினும் தக்க நேரத்தில் எடுத்த தக்க முடிவு பாகுபலியை நல்ல மக்களால் விரும்பப்பட்ட தலைவன் என்பதை சினிமா காட்டியது.

ஜனநாயக நாடுகளிலும் ஆள்பவர்களால் ஆளப்படுபவர்கள் எப்போதும் காப்பாற்றப்பட வேண்டிய வர்கள் என்பது தான் உண்மை. அவ்வளவுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here