நாமாய் முடங்குவோம்: இல்லையேல் அடக்கம் தான்

433

நாட்டில் இன்றைய தினம் 3806 பேர் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 186 பேர் மேலும் இறந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு 6790 ஆக அதிகரித்துள்ளது.

இவ்விரு பதிவுகளும் இதுவரையில் பதிவான பதிவுகளில் அதிகமாகும். ஆக, கொரோனாவின் தாக்கம் எல்லை மீறி உச்சக்கட்டத்தை நோக்கி நகர்கிறது என்பதனை யாரும் சொல்லி அறிய வேண்டியதில்லை. இவ்விடத்தில் அரசின் பாராமுகம் விநோதமானது.

ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆனால் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் பிரஜைகள் “அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி” என்று இருக்க வேண்டியதில்லை.

எம்மையும் எம் சார்ந்தவர்களையும் கொரோனாவின் கோராத்தாண்டவத்திலிருந்து ஓரளவேனும் மீட்க வேண்டுமாயின் நாமாய் உணர்ந்து முடக்கத்தை சுவீகரிக்க வேண்டும். தற்போது பல இடங்களில் மக்கள் தாமாய் உணர்ந்து நடமாட்டங்களை தவிர்த்துவருகின்றனர்.

அதே போல் வடக்கிலும் மக்கள் தாமாக முடக்கத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இல்லையேல் அடக்கம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here