சிறார்களை வேலைக்கு அமர்த்துவது பாவச் செயல்

671

ஐக்கிய நாடுகள் அமையத்தினால் சிறுவர்களை பாதுகாப்பதற்கான பல்வேறு சட்டங்கள் அமுலாக்கப்பட்டிருந்தும் இன்றுவரை சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் குறைவில்லை.

இவ்விடயத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளும் சரி வளர்முக நாடுகளும் சரி ஆரோக்கியமற்ற பதிவுகளைக் கொண்டிருக்கின்றன.

இலங்கையில் கணிசமான சிறுவர் உரிமை மறுப்புக்கள் பதிவிலிருந்தாலும் கடந்த கொரோனா தொற்றுக் கெதிரான பொதுமுடக்கம் வறிய மற்றும் பின்தங்கிய குடும்பங்களில் சிறுவர் உரிமைகள் வெளிப்படையாகவே மறுக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்குதல் சிறுவர்களையும் வேலைக்கமர்த்தும் பழிச்செயலுக்கு வலிந்து தள்ளுகிறது. மலையகம் போன்ற பிரதேச சிறார்கள் குறிப்பாக 15, 16 வயது சிறுமிகள் 18 வயது அடைந்து விட்டதாக காண்பிக்கப்பட்டு கொழும்பு போன்ற விரைகதி நகரங்களில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

அவர்களது குடும்பச் சூழலும் பாதுகாப்பற்றதாகவே உள்ளது. அத்துடன் குடும்ப சுமையை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் வலிந்து தள்ளப்படுவதும் பாரிய உண்மை.

18 வயதிற்கு உட்பட்டவர்கள் நேரடியாக பெற்றோர்களால் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் வேலியே பயிரை மேயும் பரிதாபங்களும் உள. அண்மைக்காலத்தில் பகிரங்கமான இருவேறு சம்பவங்கள் இதையே சாடி நிற்கின்றன.

கல்கிசையில் ஒரு சிறுமி செல்வந்தர்களின் பாலியல் பசிக்காய் விற்கப்பட்டாள். மலையக சிறுமி வேலைக்கமர்த்தப்பட்ட நிலையில் உடல் எங்கும் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாள்.

இதை அனுதித்த பெற்றோர்களும் இப்படிச் செயலுக்கு பங்குதாரர்களே. இது தொடர்பில் சமூக விழிப்புணர்வு இன்றியமையாதது.

குடும்ப உறுப்பினர்களின் பதிவுகளை முறையாக பரிசீலிப்பதன் மூலம் இத்தகைய உரிமை மறுப்புக்களை நிச்சயம் கண்காணிக்க முடியும். ஏனெனில் இப்பாவச் செயலுக்கு நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் காரணமாகிறோம் என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here