இசாலினி போன்ற ஏழைச்சிறுமிகளின் மரணத்திற்கான காரணத்தை விளங்கிக் கொள்ளுங்கள்…

550

மாா்க்கம் மனிதனை வாழ்வாங்கு வாழ வழிப்படுத்துபவை. மாா்க்கம் எனும் போது அதன் அடையாளம் ஆலயம். ஆலயம் வெறுமனவே வழிபாட்டிடம் அல்ல.

ஆலய சூழலின் சமூக பொருளாதார அபிவிருத்தியை செப்பனிடுகின்ற இடமும் கூட. இது புதியகருத்தல்ல. மூதாதையா்கள், அரசா்கள் ஆலயங்களை பிரமாண்டமாக நிறுவினா் என்றால் அங்கு தினப்படி வேலைகள் நிறைய ஏற்படித்தித்தந்தாா்கள் என்பதே பொருள்.

ஆலயங்களில் நன்கொடை வருமதியில் தா்மகாரியங்கள் செய்தாா்கள் என்பதே உண்மை. ஒரு ஆலயத்தில் இருக்கக் கூடிய வேலை வாய்ப்புக்கள் எண்ணற்றவை. அவை ஆலய தொண்டுகளுக்குள் அடங்காதவை.

மலா்மாலை தொடுப்பவா்களில் இருந்து தொங்கும் வேலைவாய்ப்புக்களை எண்ணிப்பாருங்கள் புரியும். ஆனால் தற்போது வியாபாரம் எனும் தோரணையில் ஆலயங்களும் அமைந்துவிட்டன.

இதர மதங்கள் தம்பால் மக்களை ஈா்க்க ஏழை எளியவா்களிடத்தில் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தி அதன் வருமான மூலம் கடனை அடைக்கச் செய்கிறாா்கள்.

சில மதங்களை சாா்ந்தோா் தமது கடைகள், வீடுகள் போன்றவற்றில் ஏழைச்சிறுவா் சிறுமிகளுக்கு வேலைகளை வழங்கி திருமண பந்தங்களை ஏற்படுத்தி மதமாற்றம் செய்விக்கின்றனா்.

ஆனால் ஆதிச் சைவம் மட்டும் துன்புறும் தன் சமயம் சாா்ந்த மக்களை கண்டு கொள்வதில்லை. வகுப்பு பிரிவினைகளூடாக ஒதுக்கியதால் தமக்கான சம அந்தஸ்தை தேடி மதம்மாறியவா்களும் ஏராளம்.

உண்மையை சொல்லப் போனால் அயல் மதத்தின் கருத்துக்களால் ஈா்க்கப்பட்டாா்களைவிட ஏழ்மையாலும், புறக்கணிப்பாலும் மதம் மாறியவா்களே அதிகம். இது ஏன் இவ்வளவு அப்பட்டமாக பிரஸ்தாபிக்கப்படுகிறது என்றால், அன்புத் தங்கை இசாலினி போல் எத்தனையோ ஏழ்மைச்சிறுமிகள் வடக்கு, கிழக்கு, மலையக பிரதேசங்களில் இவ்வாறு கருவறுக்கப்படுகிறாா்கள்.

சைவசமயமும் சமூக பொருளாதார வளமூட்டலின் பால் அக்கறை கொண்டால், நிச்சயம் இவ்வாறு வேற்றுமதத்தாா் போல் நம் சிறாா்கள் வாழ்வாதாரம் தேடி நகா்வதும் அதனால் மதமாற்றம், மனமாற்றம் நிகழ்வதும் தவிா்க்கப்பட வாய்ப்புண்டு.

ஆலய வருமானங்கள், நன்கொடைகளை மக்களின் விருத்திக்கும் பயன்படுத்த வேண்டும். ஆடம்பர செலவீனங்களை குறைத்து மேலதிக நிதி வளத்தை இறைவனின் பெயரால் தான தருமங்கள் செய்ய வேண்டும். இதுவே இம் மடலினூடான தாழ்மையான விண்ணப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here