சுகவாழ்விற்கான சவாலை நோக்கி…

514

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நம் முன்னோர்கள் எதைத்தான் சொல்லவில்லை.

அனைத்து வாழ்வியல் தத்துவங்களை யும் நம் மத்தியில் விதைத்து விட்டு சென்றுள்ளனர்.

அதற்கு எளிய உதாரணம் “சுத்தம் சுகம் தரும்” என்பதாகும். மனித வாழ்வியலுக்கு தேவையான உணவு, உடை, உறையுள் இவை மூன்றி லும் சுத்தம் இன்றியமையாதது. தொற்று நோய்கள் இவை மூன்றினாலுமே நம்மை எளிதில் வந்தடைகின்றன.

அதனால் தான் உணவே மருந்து, கந்தை யானாலும் கசக்கிக் கட்டு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சுகவாழ்வுக்கான பொன்மொழிகளை சொல்லிவைத்தார்கள்.

ஆனால் கடுகதி வாழ்வு இவற்றைக் கணக்கெடுக்காமல் மிக வேகமாகப்பரவும் தொற்றான கொரோனா வரை நம்மை பயங் கரப்படுத்தியுள்ளது என்பதே உண்மை.

சூழலின் நிலைபேறுகைச் சம நிலை என்பது தொற்று நோயாக்கிகளின் தாக்கமும் கலந்ததுதான். ஆயினும் அவற்றுடன் போராடி வெற்றி கொள்வதற்குரிய பொறிமுறையும் இயற்கையிலேயே உள்ளது.

ஒன்றில் மனித உடலின் அகச்சூழல் அல்லது உடலல்லாத புறச்சூழல் எப்படியேனும் பிறபொருள் எதிரியை உற்
பத்தி செய்து நம்மை தாக்க வரும் எதிரிகளான நோயாக்கி கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது இயற்கை.

உண்மையில் நமது தற்போதைய வாழ் வியலில் அவற்றுக்கான சந்தர்ப்பம் வெகு வாகவே குறைந்துவிட்டது. சுகதேகி என்று சொல்லுமளவிற்கு உதாரணர்களை குறிப்பிட்டு சொல்ல முடியாத சூழலே நிஜம்.

அதனால் கொரோனா போன்ற, விருந்து வழங்கிகளை தனக்கேற்ற சூழலுக்காக சாதகமாக்கும் நோயாக்கிகளுக்கு தொற்றுதல் என்பது எளிதாக வாய்ப்பாகின்றது. எமது உடல் தொற்றுக்கு எதிராக தயாராகின்ற போதிலெல்லாம் இவ்வகை எதிரிகள் தமது இருப்புக்கு தயாராகிவிடும்.

அதாவது எமது உடல் பிறபொருள் (நோயாக்கி) எதிர்ப்பு பொறி முறைக்கு ஆளாகும் போதிலெல்லாம் நுண்ணங்கிகள் (கொரோனா வைரஸ் – டெல்டா வைரஸ்) தன்னை எதிர்ப்பாற்றலுக்கு உட்படுத்தும் அளவுக்கு தயார்படுத்திவிடும்.

ஆதலால் தொற்று ஏற்பட்ட பின் எடுக்கின்ற முயற்சிகள் நமக்கு சாதகமாக அமைவதைக் காட்டிலும் மேலானது தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது. அதனால் தான் வள்ளுவர் பெருமானார் பின் வருமாறு கூறி வைத்தார்.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.” அதாவது துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யா மையானது நெருப்பின் அருகில் வைக்கப் பட்ட வைக்கோல் போலக் கெடும்.

ஆகவே நம்மையும் நாம் சார்ந்தவர் களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது ஒவ்வொருவரதும் தவிர்க்க முடியாத கடமை.

ஆதலால் சுகாதாரத்தைப் பேணி சுக வாழ்விற்கெதிரான சவாலை வெற்றிகொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here