டெல்டா வைரஸ்: பராக்!

466

புதிய, உருமாறிய டெல்டா வைரஸ் இன் பரவல் மீண்டும் கொவிட்-19 பெருந்தொற்றின் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

தற்போது 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் உருமாறிய டெல்டா வைரஸ் இன் தாக்கம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறித்த அச்சத்துக்கு வலுவூட்டும் விதமாக கொழும்பு நகரம் உருமாறிய டெல்டா வைரஸ் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பினை அண்மித்த பகுதிகளில் 14 பேருக்கு குறித்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகளை தளா்த்திவரும் நிலையில், மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சாதாரணமான சூழலுக்கு இசைந்து செயற்படுமாற் போல் முகக்கவசம் இல்லாமலும், சமூக இடைவெளிகளைப் பின்பற்றாமலும் இயங்குவதை அவதானிக்க முடிகிறது.

2020 டிசம்பரில் பிரித்தானியாவில் பொது முடக்கம் தளா்த்தப்பட்டபின் இதே போல் அங்குள்ள மக்கள் செயற்பட்டதால்தான் அல்பா வைரஸ் வேகமாக பரவியது.

நமது நாட்டிலும் இவ்வாறான அசமந்தப் போக்கு நீடிக்குமாக இருந்தால் டெல்டாவின் தாக்கத்திற்குள்ளாகி நாடு பாரிய பின்னடைவை சந்திக்க நேரலாம்.

தற்போது விசேசங்கள், ஆலய விழாக்கள், பொது நிகழ்வுகள், பொதுப் போக்குவரத்துப் பயணங்கள் என்று பல விடயங்களூடாக மக்கள் ஒன்று கூடும் சந்தா்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் டெல்டா தொடா்பில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here