நாடளாவிய ரீதியில் கொரோனாவிற்கு எதிரான வக்சின்கள் பரவலாக வழங்கப்படுகிறது. தடுப்பூசி வழங்கப்படுவதால் கொரோனா தொடர்பான அச்சமற்ற நிலையை காணக்கூடியதாக உள்ளது.
குறித்த கொரோனா வைரசானது நமது உடலில் தன்னை உருமாற்றி தங்கி வாழ்வதற்கு இயைபாக்கம் அடையும் வல்லமை உடைய உயிரி என்பது பல ஆராய்ச்சிகளின் முடிவு. ஆதலால் தடுப்பூசி பெற்று கொண்ட நபர் ஒருவரிலும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர் காவியாக சமூகத்தில் நடமாடமுடியும்.
மேலும் எல்லோருக்கும் இன்னும் தடுப்பூசி வழங்கப்பட்டு முடிவுறுத்தப்படவும் இல்லை.
அத்துடன் இரண்டாவது டோஸ் உம் பாக்கி இருக்கிறது. இந்நிலையில் சமூக இடைவெளி பேணல், முகக்கவசம் அணிதல், தொற்று நீக்கிகளால் கைகளை கழுவுதல் போன்ற விடயங்களை தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
அதிலும் பலர் தடுப்பூசி போட்டு விட்டம் தானே என்று பகிரங்கமாகவே கூறி மேற்போந்த செயற்பாடுகளை மறுக்கின்றனர்.
தடுப்பூ என்பது வெறும் பாதுகாப்பு வேலியே தொற்றை தடுக்கும் வழி அல்ல. தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் செயற்படுதலே இப்போதைக்கு பொருத்தமானது.