உலகளாவிய கொவிட் – 19 தொற்றினால் மக்கள் நம் நாட்டிலும் பொருளாதார முடக்கத்திற்கு வலிந்து தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு வலுச்சேர்த்தாற் போல பல அத்தியாவசிய பொருட்களுக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியும் மக்கள் இன்னல்களுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது மட்டுமன்றி சில அத்தியாவசியப் பொருட்கள் அரிசி, பருப்பு, உழுந்து, மஞ்சள், பலசரக்குப் பொருட்கள் போன்றன ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விலைகளில் விற்கப்படுகிறது. புரொய்லர் இறைச்சியும் அதே போலத்தான்.
700 ரூபா முதல் வெவ்வேறு விலைகளில் 1 கிலோ இறைச்சி விற்கப்படுகிறது.
இது ஒரு புறமிருக்க கட்டிடப் பொருட்கள், விவசாய உபகரணங்கள், பசளைகள், கடற்றொழில் உபகரணங்கள், தச்சுப் பொருட்கள், மருந்து வகைகள் எல்லாமே பிரதேசங்களுக்கு பிரதேசம், கடைகளுக்கு கடை விலைகளில் ஏற்றத்தாழ்வுகள் பரஸ்பரம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இது விடயத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விலைக்கட்டுப்பாடு பொறிமுறையை கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து மக்களுக்கான சேவையாற்ற முன்வர வேண்டும்.
அதேவேளை விற்கப்படும் பொருட்களின் தரம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தமது கண்காணிப்பை செலுத்துதல் வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் மேலாக வியாபாரிகள் இடர்கால சூழலை உணர்ந்து தமது நுகர்வோராகிய மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்களாக தமது சேவையை தொடர்தல் நன்று இல்லையெனில் ஆரோக்கியமற்ற நுகர்வோர் வியாபாரிகள் இடைத் தொடர்பு நாட்டில் அதிகரித்துவிடும்.