முன்கள அத்தியாவசிய சேவை அரச பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படாதது ஏன்?

711

தற்போதைய, பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் டெல்ரா வைரஸ் இன் பரவல் சமூகத்தில் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று உலகில் தாக்கத்தை ஆரம்பித்து தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பரவலாக தடுப்பூசி ஏற்றும் பணிகளும் இடம்பெற்று வருகிறது.

அதில் பரவலாக தடுப்பூசி ஏற்றும் பணிகளும் இடம்பெற்று வருகிறது. இதில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், வி.ஐ.பிக்கள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு மிக முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் கணிசமான அளவில் முற்றுப்பெற்றுவிட்டது. ஆனால் தினசரி பொது மக்களை சந்தித்து அரச கடமை புரியும் வெளிக்கள உத்தியோகத்தர்களான கிராமசேவர்கள், அபிவிருத்தி உத்தியோக்தர்கள், சமுர்த்தி அலுவலர்கள் போன்ற பல வகுதியினரை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தற்போது அரச உத்தியோகத்தர்களது கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களும் பதிவாகி வருகிறது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின்போது மீனவர்களுக்காக நஸ்டஈடுகளுக்காக தன்னை அர்ப்பணித்த கொழும்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஒருவர் மரணமடைந்தார்.

மேலும் யாழில் ஆங்கில விரிவுரையாளர் ஒருவரும் மரணத்தை தழுவியிருந்தார். இவை செய்திகளாகப் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்திய விடயம்.

இவ்வாறு நாட்டின் பல பகுதிகளிலும் பல அரச பணியாளர்கள் கொவிட் – 19 இனால் மரணமடைந்து வருகின்ற நிலையில் இதுவரை குறிப்பிட்ட அளவேனும் தடுப்பூசிகளை அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச பணியாளர்களுக்காக ஒதுக்காதமை ஏன்? என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது.

அரச பணியாளர்களை கொவிட் இலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை இல்லையா? என்பதே வினாவாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here