கொரேனா வைரசின் திரிபுவடிவங்களில் மிக அபாயமான திரிபாக கருதப்படுவது டெல்ரா வைரஸ் தற்போது 89லும் அதிகமான நாடுகளில் டெல்ரா வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது மிகவும் வேகமாக பரவும் ஆற்றலுடையது எனவும் இது புதிய கொத்தணிகளை உருவாக்கி சவாலாக அமையும் எனவும் மேலும் இத் திரிபு கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ் வைரஸ் திரிபானது எச்சில் துகள்களினூடாக பரவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
தற்போது பயணக்கட்டுப்பாட்டு தளர்வுகள் மக்கள் தமது சுய சுகாதார பாதுகாப்பையும் தளர்த்தியுள்ளமையை காணமுடிகின்றது.
இதனால் டெல்ரா வைரஸின் பரம்பல் அச்சுறுத்தக்கூடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது என்பதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது வரை கொவிட் பரவலால் உலகளவில் 17 கோடிபேர் பாதிப்படைந்துள்ளனர். 38 லட்சத்திற்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
ஆதலால் மக்கள் புதிய கொரோனா வைரஸ் திரிபு தொற்றில் அதிக அக்கறையுடையவர்களாகவும் விழிப்புணர்வுடையவர்களாகவும் இருத்தல் அவசியமாகிறது.