கொவிட்டையும் அரசியலாக்கும் அற்பர்கள்…

699

ஜனநாயகம் என்பது மக்களாட்சி.

மக்களால் மக்களுக்காக என்பது தான் ஜனநாயகக் கோட்பாட்டின் கரு.

ஆனால் எல்லா ஜனநாயக நாடுகளிலும் மக்களாட்சி நடைபெறுகிறதா? என்றால் யாரும் துணிந்து சொல்ல முடியும் அறவே இல்லை என்று. அதிலும் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து எந்த ஆட்சியாளர்களும் ஜனநாயகப் போக்கை கையாண்டதாக தெரியவில்லை.

மாறாக ஜனநாயகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய எதிர்க்கட்சிகள் கூட சுயலாப அரசியலை மட்டுமே வழி கொள்கிறார்களே தவிர மக்களாட்சிக்கு சார்பாக குரல் கொடுப்பார்கள் இல்லை. சிறுபான்மை கட்சிகளும் அவ்விதமே.

இஃது கொவிட் 19 பெருந்தொற்றிலும் நிகழ்வது தான் நிட்டூரம்.

இலங்கை மக்கள் செய்த பாவம் தான் என்ன இறைவா? அரசியாளர்கள், பெரும் முதலாளி வர்க்கத்தினர், செல்வந்தர்கள், இவர்கள் அனைவரதும் குடும்ப உறுப்பினர்கள் யாவரும் தடுப்பூசி ஏற்றியவர்களாக இருக்கும் நிலையில் அப்பாவி மக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இது தொடர்பில் குரல் கொடுக்க திராணியற்றவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர்.

உயிரியால் சத்தமின்றி இரத்தமின்றி நடாத்தப்படுகின்ற உலகம் பெரும் யுத்தநிலைமையிலும் அச்சூழலை தமக்கு சாதகமாக வடிவமைக்கும் ஆட்சியாளர்கள் துணை போகும் அரசியல்வாதிகள் இவர்கள் மத்தியில் மக்கள் அநீதியை சுவீகரிக்கிறார்கள் என்பதே உண்மை. இதை எண்ணும் போதுதான் ஒரு விடயம் ஞாபகம் வருகிறது.

2004இல் சுனாமி இலங்கையின் இயல்பை புரட்டிப் போட்டது. அப்போது நாட்டில் உள்நாட்டு யுத்தம் இடைநிறுத்தபட்டு இருந்தது.

சுனாமியின் கோரத்தன்மையை உணர்ந்து உலக நாடுகள் உதவி செய்தது போலவே தமிழீழ விடுதலைப் புலிகளும் நிதி திரட்டி இலங்கை அரசிற்கு வழங்கினார்கள் என்பது பதிவு.

இலங்கை அரசால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட அமைப்பினரின் மேற்படி செயற்பாட்டை வைத்து ஒப்பிடும்போது தற்போது அரசியல்வாதிகள் கொரோனா இடரை தமக்கு சாதகமான போக்கில் விட்டுக் கொடுப்பது ஈனச் செயல் அன்றி வேறென்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here