“குரு கெதர” எல்லா மாணவர் வீடுகளுக்கும் செல்வாரா?

526

சுகாதாரப் பிரச்சனை தானே என மட்டும் எண்ணிய கொவிட் – 19 பெருந்தொற்று தற்போது சமூக மற்றும் பொருளாதார பிரச்சனையாக உருவெடுத்து பல்வேறு பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இதில் முக்கிய சமூக பொருளாதாரப் பிரச்சனையாக கருதப்படுவது மாணவர் கல்வி. இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் மாணவர்களின் கல்விக்கான முக்கியத்துவம் இன்றியமையாதது.

எல்லோருக்கும் கல்வியறிவு அவசியம் என்பதாலேயே இந்நாட்டில் இலவச கல்வி மற்றும் இலவச பாட நூல்கள் விநியோகம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும் விசேசமாக அனைவருக்கும் சமனான கல்விச்சூழலை வழங்க வேண்டும் என்பதற்காகவே இலவச மாணவர் சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே.

ஆனால் தற்போதைய சூழலில் இவ்வாறான சம கல்விச்சூழலை வழங்குவதில் பாரிய பின்னடைவை கல்வி தருநர் சூழல் அனுபவித்து வருகின்றது.

2020, மார்ச் மாதமளவில் முடக்கப்பட்ட பாடசாலை நடவடிக்கைகள் 2020 – ஆகஸ்ட் மீள இயக்கப்பட்டு 2020- ஒக்ரோபர் ஆகும் போது மீண்டும் முடக்கப்பட்டு தற்போது வரை மீள இயக்க முடியாத அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் “குரு கெதர” திட்டத்தின் மூலம் கல்வி நடவடிக்கை தினமும் 16 மணித்தியாலங்கள் தொலைக்காட்சிவாயிலாக முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் மூலம் தற்போது 35 லட்சம் வரையான மாணவர்கள் பயன்பெறுவதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனின் 42 லட்சம் மாணவர்களில் மிகுதிப் பேரின் நிலை என்ன?

குறித்த 35 லட்சம் பேரும் பிரயோசனமான முறையில் கற்கிறார்களா? அவர்களது கல்விச் சூழல் திருப்தியானதா? கல்வி வழங்கல் என்பது வெறுமனவே பாடத்திடத்தை ஒன்லைன் மூலமாகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ வழங்கி விடுதலா? என்பது தொர்பிலும் அமைச்சர் குறிப்பிட்ட புள்ளி விபரம் தொடர்பிலும் மேலதிக அவதானம் வேண்டும்.

அதிகார மட்டங்களை திருப்திப் படுத்துவதான அறிக்கைகளாய் இருப்பின் மெல்லக்கற்கும் மாணவர்கள், விசேட கவனம் எடுக்க வேண்டிய மாணவர்கள், வறிய மாணவர்கள் மற்றும் நடுத்தர மாணவர்கள் போன்றோர் தமது கல்வியறிதலை பெறும் உரிமையில் அலைக்கழிக்கப்படுவார்கள் என்பது திண்ணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here