சா்வம் சைனா மயம்…

544

சைனாக்காரருடைய வியாபரத்தொடா்பு என்பது இலங்கை மற்றும் இந்தியாவை பொறுத்தவரை வரலாற்றுத் தொடா்பு என்றே கூறலாம்.

சைனாவிற்கும் இலங்கைக்கும் பண்டைக்கால பண்டைமாற்றுத் தொடா் பிலிருந்து இன்றுவரை அன்னியசெலாவணித் தொடா்பு ஆக திரிபடைந்து தற்போது இந் நாட்டின் ஒரு சுதேச இனத்திற்குக் கூட இருக்காத சலுகைகள் வரை வளா்ச்சியடைந்து காணப்படுகிறது.

இதில் விமா்சனத்திற்குரியது என்னவென்றால்? அது வியாபாரத் தொடா்பு அல்ல அதையும் தாண்டி சீனாவிற்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்கள் தான்.

இலங்கையிலே 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் 30 வருடத்திற்கும் மேலான உள்ளாட்டு யுத்தம் இழையோடிப்போன சிறுபான்மைச் சுதேசிகளுக்கும் கிடைக்கப் பெறாத மொழி அந்தஸ்து, இட ஒதுக்கீடு, முதலீட்டு வாய்ப்பு போன்ற அங்கீகாரங்கள் சைனாவிற்கு வழங்கப்படுவதால் தான் விமா்னத்திற்குரியதாகிறது.

தற்போது ஊடக அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்து.

ஆம், இலங்கையின் தலைநகரான கொழும்பில் சைனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சைனா மொழியிலான பத்திரிகைகள் விற்பனையாகின்றன.

அதில் இலங்கைத் தகவல்கள் மற்றும் சைனா நாட்டு தகவல்கள் இடம் பெறுகின்றன. தற்போது இறக்குமதியாகும் பத்திரிகைகள் வெகுவிரைவில் இலங்கையிலேயே அச்சிட்டு வெளிவரக்கூடிய சாத்தியத்திற்கான அச்சத்தை தோற்றுவித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளிற்கு குடிபெயா்ந்த ஈழத்தமிழா்கள் அவ் நாடுகளில் தமது ஊடக சுதந்திரத்தை நிலைநாட்ட சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை வெளியிடுகிறாா்கள்.

வேற்று நாட்டவா்களும் அவ்வாறு இருக்கலாம்.

ஏனெனில் அங்கே அவா்களுக்கான பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அப்படியெனில் இலங்கையிலும் சைனாக்காரா்களுக்கான பிரஜாவுரிமைக்கான அத்தியாவசிய மட்டங்கள் பூரணப்படுகிறதா? என்ற கேள்வியே அச்சமூட்டுகிறது.

சைனாவிற்கென ஒதுக்கப்பட்ட காலணித்துவ பிரதேசங்கள் இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டு இலங்கையின் அரசியல் தலையீடற்ற, தற்சாா்பு பொருளாதார கொள்கையுடைய நில வகுதியை சைனா தனக்குள் அடக்கிவிடும் எனும் அச்சம் உறுதி செய்யப்படுகிறது.

ஆக, தமிழா் தரப்பும் அரசினை சமாளித்து வருமான வழியைக் காட்டியிருந்தால் சைனாவிற்கு கிடைத்தது போன்ற தன்னதிகார நிலப்பிரதேசம் தமிழா்களுக்கும் கிடைத்திருக்குமோ? என்னவோ?

யாமறியோம் பராபரமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here