இடர் எது வரினும், இன பேதமே இலக்கு…

637

கொரோனா பேரிடர் நாட்டின் எதிர்காலத்தை திக்குமுக்காடச் செய்து வருகிறது. பல அன்றாடகாட்சிகள் பயணத்தடையால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை காரணமாக வாழ்வாதார நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர்.

பயணத்தடையை அமுல்படுத்திவிட்டு பொருத்தமான நிவாரணம் வழங்காமல் காலங்கடத்துகிறது இலங்கை ஆட்சிபீடம்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

பயணத்தடையை முடிவுக்குக்கொண்டுவர முடியாமல் நீடித்த வண்ணமே நாடு நகர்கிறது.

தொற்றாளர்களுக்கான சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளுக்காகவும் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கும் காத்திருக்கின்ற நிலைமையே நீடிக்கிறது.

பல ஆலயங்கள் மத தலங்கள் மக்கள் கூட்ட மற்று இயல்புநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

இது இவ்வாறு இருக்க குருத்து மலையில் விகாரை அமைக்கும் பணிகளில் அரச தரப்பு காட்டுகின்ற அக்கறை சிறுபான்மை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எந்த இடர் வந்தாலும் சிறுபான்மை இன மக்களை சீண்டிப்பார்க்கின்ற செயற்பாடுகளை அவர்களை கவலைக்குள்ளாக்குகின்ற நடவடிக்கைகளை அரங்கேற்றுவதில் குறியாக உள்ளது ஏன்? பிற மத தலங்களில் மக்கள் கூட்டம் சேர முடியாது.

ஆனால் இங்கு மட்டும் பயணத்தடையிலும் செயல்பாடுகள் நிகழ்கிறது என்பதன் பின்னால் எதை சொல்ல வருகிறார்கள்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் இனபேதத்தை கைவிட மாட்டோம் என்பதன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here