காட்டிக் கொடுக்கிறது இயற்கை – களங்கப்படுகிறது அரசு

1074

கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக கூறி பிரம்மாண்டமாக தேர்தலை நடாத்தி பெரும்பான்மைப் பலத்தை பெற்றது அரசாங்கம்.

பின்னர் தற்போது பாரிய அளவில் கொரோனா தொற்றுக்களும் மரணங்களும் எகிறிக் கொண்டே போகிறது.

கம்பஹாவின் பல பகுதிகள் நினைச்சுப் பார்க்க முடியாத அளவிற்கு கொவிட் – 19 இனால் பாதிக்கப்பட்டுள்ளமையே போதும் இதற்கு சான்று.

இப்போது யாழ்ப்பாணத்திலும் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களும் அதிகரித்த வண்ணமாய் உள்ளன.

ஆக கொரோனா தொற்று இல்லை என்று சொன்னாலும் அது மூடிமறைக்கக் கூடிய விடயமல்ல என்பதும் இயற்கை காட்டிக் கொடுக்கும் என்பது புலனாகிறது. படிப்பினைகள் திருந்தவதற்கானது. ஆனால் யாரும் தயாரில்லை.

இது இவ்வாறு இருக்க கடலில் இருந்து இறந்த கடல் வாழ் உயிரிகளின் உடல்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஒதுங்கிய வண்ணமுள்ளன.

இதற்கு காரணம் அண்மையில் தீப்பற்றி எரிந்த கப்பல் மட்டுமே என்பது தெள்ளத்தெளிவு.

அக்கப்பலில் இருக்கக் கூடிய இரசாயனங்கள் கடல்நீரில் கலந்து கப்பலின் உடனடிச்சூழலில் செறிவடையும்.

இதனால் அவ் உடனடிச்சூழல் நச்சுத்தன்மையானதாகவும் வெப்பநிலையில் கூடியதாயும் காணப்படும்.

அச்சூழலுக்குள் பிரவேசமாகும் உயிர்கள் உடனடியாகவே இறக்கும்.

மேலும் பிளாஸ்திக் இனை உணவென நினைத்து உட்கொள்ளும் அங்கிகளும் இறக்கும்.

இப்படியான நிகழ்வுகள் உலகின் வெவ்வேறு இடங்களில் பதிவாகியுள்ளன.

இப்பாதிப்புக்களால் கடல்வளத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது நிறுத்திட்டம். இதனால் கடல் உணவு நுகர்வு விற்பனை மற்றும் ஏற்றுமதி பாதிப்படையும்.

இவற்றை கருத்தில் கொண்டு மறைக்க முற்பட்டாலும் இயற்கை காட்டிக் கொடுத்து விட்டது என்பதே உண்மை. இவை அரசின் அசமந்தப் போக்கினையே பறைசாற்றி நிற்கிறது.

நாட்டின் வளம் மற்றும் மக்களின் நலம் தொடர்பில் அரசு அதீத கவனமெடுத்தால் நாட்டின் எதிர்காலம் வரமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here