அடிக்கு மேல் அடி… திணறும் மக்கள்

501

துன்பம் ஒரு திசையில் வந்தால் கூட சமாளிக்க முனையலாம்.

திரும்புகிற திசையிலெல்லாம் துன்பமென்றால் யார் தான் என்ன செய்ய முடியும்?.

“சாண் ஏற முழம் சறுக்கிற” கதை மாதிரி போச்சு பெற்றோல் விலையேற்றம்.

எரிபொருள் விலையேறினால் பிறகென்ன, ஓட்ட மற்றிக்கா எல்லா அத்தியாவசிய சமான்களும் எகிறிப்போய் எவரஸ்ட்ல நிண்டெல்லோ விலை சொல்லப் போகுது.

மக்கள் இப்படியாக புலம்புவதை யார் தான் அவதானிக்கப் போகிறார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாகனம், அதற்கான எரிபொருள் பட்டா என்று வாழும் ஆட்சியாளர்களுக்கோ அல்லது அரசியல் பிரதிநிதிகளுக்கோ தெரிவதில்லை, அவர்களுக்கும் சேர்த்து வரிகட்டும் மக்களின் அவலநிலை.

எந்த அமைச்சும் மக்களுக்கான சலுகைகளை தவிர்த்து அவர்களை கஸ்ரத்திற்குள்ளாக்கும் செயற்பாடுகளில் தான் உடனடியாக இறங்குகின்றனர்.

நில அபகரிப்பா? தாமதமில்லை.

பயணக்கட்டுப்பாடா? மாற்று யோசனை இல்லை.

பாடசாலைகள் மூடுவதா? வேறு திட்டமில்லை.

மஞ்சள் , உழுந்து போன்ற ஊட்ட உணவுகளின் இறக்குமதி தடையா? உடனடியாக.

துறைமுகநகர அமுலாக்கமா? தனியாக பாராளுமன்றம் கூடும்.

எரிபொருள் விலையேற்றமா? அடுத்த நிமிடமே அமுலாகும்.

இப்படியாக இருக்குது ஆட்சி தரப்பினரின் ஜனநாயக சேவைகள்.

இது ஜனநாயக நாடா?. கம்யூனிச நாடா? என்பதே பாரிய டவுட்டாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here