ஏழை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் குறித்து சரியான பொறிமுறை உண்டோ?

687

நாட்டில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்றுக்கு எதிரான பொது முடக்கம் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது.

ஆனாலும் நிகழ்நிலை மூலமாக ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுவதும், இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாக கற்பித்தல் காணொளிகள் ஒலிபரப்பப்படுதல் வரவேற்கத்தக்க வகையில் அமைந்தாலும், குறித்த ஊடக மூலகக் கல்விச் செயற்பாட்டிற்கு புத்தகமும் பேனையும் மட்டுமே போதாது.

இதற்கு TV, ஸ்மார்ட் போன் அல்லது கம்பியூட்டர் அல்லது ஸ்மார்ட் ரப் ஏதேனும் ஒன்று அவசியமாகிறது.

அத்துடன் கவரேஜ், டேட்டா போன்றன இன்றி இவ்வூடக கற்கை சாத்தியமற்றதாகிறது.

இது ஏழை மாணவர்கள், பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் போன்றோருக்கு பொருத்தமானதா? என்பது வினாவிற்குரியது.

படிக்கிற பிள்ளை காரணம் சொல்லாது. என்று சொல்வாரும் உண்டு. ஆனால் வசதி வாய்ப்புக்கள் இருக்க வேண்டுமே!. ஒரு கம்பியூட்டர் வாங்குவதென்றால் 60000ற்கு மேல் தேவைப்படும்.

ஒரு ஸ்மார்ட் போனுக்கு குறைந்தது 15000 தேவைப்படும். ஆனால் அவற்றையும் இப்போ பதுக்கிவிட்டார்கள்.

எல்லா வறிய மாணவர்களாலும் இயலுமா என்பது தான் எமது ஏக்கம்.

உணவுக்கே வழியில்லாமல் தவிக்கும் போது டேட்டா கார்ட் இற்கா செலவழிக்க தோன்றும்.

ஒரு வீட்டில் வெவ்வேறு வகுப்புக்களில் பிள்ளைகள் இருந்தால் ஆளுக்கு ஒரு டிவைஸ் தேவைப்படும்.

எங்கே போவார்கள். இப்போது முதலாம் தரம் செல்லும் மாணவர்கள் நிலை இன்னும் கவலைக்கிடம்.

எழுதத் தெரியாத கூட்டம் ஒன்றும் உருவாகும் வாய்ப்பிருக்கு. 

ஆகவே வறிய மாணவர்களின் கல்வியில் பொருத்தமான பொறிமுறைகளை கல்வித்திணைக்களங்கள் சிந்திக்க வேண்டும் என்பதே பேரவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here