“மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல” உள்ளது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி.
அத்தியாவசிய பொருட்களின் கொண்டு செல்லல் மற்றும் வியாபாரத்திற்காக பாஸ் நடைமுறையைப் பெற்று பயணத்தடையா இது? என்று எண்ணுமளவிற்கு வீதிகளில் மாற்றமே இல்லாத பிரயாணங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால் பொருட்கள் தட்டுப்பாடு எனக் கூறி நேரத்திற்கு நேரம் வேறு வேறு விலைகளில் நுகர வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர் நாட்டு மக்கள்.
ஒன்லைன் மூலமாக ஓடர்கள் தாருங்கள். வீட்டுக்கே டெலிவரி தருகிறோம் என்று வியாபாரம் நடாத்தும் சிலர் செய்யும் அநியாயம் அடுத்தரகம்.
அளவுகளில் பிழை. விலைகள் அதிகம். இதற்குள் சேவிஸ் சார்ச் என்று சொல்லி தமது வியாபார ஸ்தாபனத்திலிருந்தான ஓட்டோ கட்டணம்.
யாருக்கு தெரியும்? அவர்களது வியாபார நிலையம் உண்மையில் எங்கு தான் இருக்கிறது என்று.
இதற்கிடையில் விடுபட்ட பொருட்களும் பில்லில் வரும்.
சாமான் அடுத்த ரிப், பின்னேரம் வரும் போது வருமாம்.
நம்பித்தானே ஆகணும் என்ற நிலையில் கடக்கிறது கொரோனா பயணத்தடைகாலம்.
சொகுசு வாகனங்களில் வந்து ஒற்றைக்கதவு திறந்த நிலையில் பொருட்கள் கொள்வனவு செய்கின்றனர்.
ஆனால் அப்பாவி மக்கள் பாதைகளில் இறங்கினால் மட்டும் ட்ரோன் கமராக்கள் காட்டிக் கொடுத்து விடுகிறது பாவம்.
ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கொரோனா, வியாபாரிகள் அத்தனை பேரது சிந்தனையும் செயலும் ஒத்துப்போவதுதான் வியப்பிலும் வியப்பு.
ஏனென்றால் எல்லோரும் அப்பாவி மக்களை மட்டுமே பின்னி பெடலெடுக்கின்றனர்.
ஐயா ! நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரே! உங்களுக்கு எப்படியும் நியாய விலைச் சாமான்கள் தான் கிடைக்கும்.
அப்படியே எங்களுக்கும் கிடைக்க ஒரு நாளைக்கு ஒரு பில்லையாச்சும் செக் பண்ணி படம்பிடிச்சு போடுங்கோ புண்ணியமாய் போகும்.
உப்பில் இருந்து உலோகம் வரைக்கும் எல்லாமே டபிள் விலை தான் கொஞ்சம் பாருங்கோவன்.