பெருந்தொற்றுக்கு எதிரான பேரிடர்

655

எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்தும் ஒரு அற்ப வைரஸ் பரவலால் மனிதர்கள் பலியாவது என்பதில் வியப்பும் இருக்கத்தான் செய்கிறது.

2018 ஆம் ஆண்டு 5ஆம் மாத காலப்பகுதிகளில் எரிபொருள் விலையேற்றம். 2019 4-5ஆம் மாத காலப்பகுதியில் குண்டுவெடிப்பு எதிரொலி 2020 மற்றும் 2021 அதே அண்மித்த காலப்பகுதியில் கொரோனா பெருந்தொற்றினால் விளைவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணத்தடைகள்.

இது ஒரு மாபெரும் யுத்தம் நடக்கின்ற பகுதிகளில் சாதாரண குடியானவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு சமனான ஏன்? இன்னும் அதிகமான அளவு வாழ்வியல் நெருக்கடிகளைத் தோற்றுவித்தவண்ணம் உள்ளதென்றால் மறுப்பவர்கள் யாரும் இருக்கார்.

இந்நிலையிலும் மக்களை ஏச்சுப்பிழைப்பாரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பணம்படைத்தவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள் எப்படியேனும் தங்கள் வாழ்வியலை நகர்த்தும் வல்லமை பொருந்தியவர்கள்.

ஆனால் அப்பாவி மக்கள், உதவியற்றவர்களால் அது சாத்தியமற்றுப் போய்விடுகிறது.

2009 ஆம் ஆண்டு இறுதியுத்தம் நடந்த போதும் பல பணம்படைத்தோர்கள் சமாளித்துக் கொண்டனர்.

ஆனால் ஏழை எளிய மக்கள் சிக்கிச் சின்னாபின்னமாகி உயிர் பிழைத்தனர்.

இது “தக்கன பிழைத்தல்” எனும் கோட்பாட்டிற்கு உட்பட்டது என்று சொல்லி கடந்து போகவும் முடியும்.

ஆனால் எம்மால் செய்யக்கூடிய உதவிகளை வழங்கி உழைப்பின்றி பசியால் துன்புறும் நம் அயலவரை, அயல் கிராமத்தவரை காப்பாற்றலாம், தேவையில்லாது நியாயமற்ற விலை அதிகரிப்புக்களை தவிர்க்கலாம், அரச சேவையை பெறவரும் குடிமக்களை அலைக்கழிக்காது சேவை வழங்கலாம், அத்தியாவசிய தேவைக்காக நடமாடும் அப்பாவி மக்களை துன்புறுத்தாது விடலாம், கல்வி திணைக்களங்கள் முன்னின்று சிறிய சிறிய பிரிவுகளாக பிரித்து தற்சமயம் அங்கு இருக்கக்கூடிய ஆசிரியர்களை வைத்து கல்விச் சேவை வழங்கலாம்.

இவற்றின் போதெல்லாம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றலாம்.

வெறுமனவே தொற்று என்று சொல்லி திட்டமிடல் இல்லாது காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காது பொருத்தமான பொறிமுறைகளை திட்டமிடல்களை அமுல்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

அது மட்டுமன்றி மக்களும் இப் பேரிடரை உணர்ந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளவர்கள் என்பதனை உணர்ந்து கொள்ளல் அவசியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here