Type to search

About Us

These elements can be placed anywhere with Drag & Drop Visual Builder.

உங்கள் ” சிலம்பின்” அன்பு மடல்.

உலக தமிழ் அரங்கில் பல்சுவை இணைய இதழாய் வலம் வரும் ” சிலம்பு ” எனும் இணைய ஊடகம் தமிழ் பேசும் மக்களுக்கான நீதியின் குரலாய் ஒலிக்க இறையருளை வேண்டி,

அன்பின் வாசகர்களே!

சிலம்பு உங்கள் இணைய ஊடகம்.

இதில் நாம் எமது மக்களின் குரலாக கொண்டு வர வேண்டும் என்று பேரவாக் கொண்டுள்ளோம்.

மக்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் சவால்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளையும் உலக இணைய ஊடக அரங்கில் பகிரங்கப்படுத்துவதே எமது சித்தம்.

“யாதும் ஊரே யாவரும் கேளீர் ” எனும் முதுகவி கணியன் பூங்குன்றனாரின் உயரிய வாக்கை சிரமேற்கொண்டு “சிலம்பு ” இனி ஒலிக்கும்.

மதுரை மாநகரை ஆண்ட மன்னன் நீதி வழுவா நெருஞ்செழியனின் சபையிலே மாதரசி கண்ணகியார் பெற்ற பேச்சுச்சுதந்திரத்தையும் அதன் மூலம் வாதாடிப் பெற்ற தனக்கான நீதியையும் மேற்கோளாகக் கொண்டு இச் “சிலம்பும் ” இணைய சபையில் உரத்து ஒலிக்கும்.

இச் “சிலம்பின் ” ஒலி அனைத்து தரப்பிலும் தனது குரலை உயர்த்தும்.

தமிழர்களின் வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, நடைமுறை மற்றும் அரசியல் என்று பல தளங்களில் சீரிய பணி செய்யவே பேரவாக் கொண்டுள்ளோம்.

இதற்காக இணைய வாசகர்களினதும் சமூக வலைத்தள பாவனையாளர்களினதும் ஏகோபித்த பேராதரவினை வேண்டி நிற்கின்றோம்.

அது மட்டுமன்றி இப்பக்கத்தில் எமது மக்களிடம் “இலைமறை காயாய் ” வெளிக்காட்டப் படாதுள்ள அங்கீகரிக்கப்படாது காணப்படும் திறமைகளையும் வெளிக்கொணர சித்தம்.

ஆகையால் தங்கள் ஆக்கங்களான கவிதை, கதை, சிறுகதை, கட்டுரை மற்றும் இலக்கிய வாதங்களையும் இங்கு பிரசுரிக்க வாசகளுக்கு பூரண சந்தர்ப்பம் உண்டு என்பதனை பெருமகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறோம்.

மட்டுமன்றி உங்கள் வர்த்தக விளம்பரங்கள், வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் இதர விளம்பரங்கள் போன்றவற்றை பிரசுரிக்க மறந்து விட வேண்டாம்.

“சிலம்பு ” குடும்பத்தில் அனைத்து வாசகர்களினதும் ஆதரவும் பங்களிப்பும் அதன் வளர்ச்சிப் பாதையை செப்பனிடும் என்பது எமது பெரு நம்பிக்கை.

நம்பிக்கைகளுடனும் இதயம் கலந்த நன்றிகளுடனும்,
சிலம்பு குழுமம்.