Type to search

Editorial

தமிழர்களின் ஜனநாயக கடமை இம்முறை விசப்பரீட்சைக்கு சமனானது…

Share

யாரவர்கள் ? யாரை நமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்போகின்றோம்? எனும் வினாக்களுக்கு பெரும்பாலும் எதிர்வரும் ஆறாந் திகதி விடை கிடைக்கக்கூடும்.

முடிவு எதுவாயினும் வாக்காளர்களாகிய பொதுமக்கள் தான் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அனுபவிக்கப்போகிறார்கள்.

இதிலே வெல்பவர்கள் அரச போகத்தையும் மட்டுமட்டாக தோற்பவர்கள் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று குறைகூறும் அரசியல் படலத்தையும் ஏனையவர்கள் தமது கட்சியின் நிழலூடு நமது வியாபார முற்சியிலும் என்று மும்முரமாகிவிட வாக்களித்தவர்கள் ஏமாற்றம் எனும் வழமையான வெகுமதியை அடையப்போகின்றமை திண்ணம். தற்போது வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கும் அரசியலாளர்கள் ஏற்கனவே ஒன்றாயும், இரண்டாகியும், தற்போது மூன்றாகியும், இதில் எதிலும் சந்தர்ப்பம் கிடைக்காதோர் சுயாதீனமாகியும் உள்ளார்களே தவிர, அவர்களுக்குள் உறங்கிக் கிடக்கின்ற பதவியாசை, ஒத்து போகாமை, பிறனிலும் தன்னை உயர்வாய் எண்ணும் தன்மை, வெளிப்படையின்மை போன்ற தமிழ் அரசியல் இருப்பிற்கு ஒவ்வாத குணவியல்புகள் அப்படியேதான் உள்ளன.

பிரதான அரசியலாளர்கள் தமக்காக வாக்குக் கேட்கிறார்களே தவிர, கட்சிக்காக கேட்பதாக தெரியவில்லை.

ஒரே கட்சிக்குள்ளேயே ஒருமைப்பாடு அற்றவர்களில் இவர்கள் தான் பொருத்தமானவர்கள் என்று தெரிவு செய்யப்போகின்றோமே! அங்கு தான் வாக்காள்களாகிய நாம் விசப்பரீட்சைக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாகிறோம்.

ஒரு கடையில் இருக்கக்கூடிய முத்திய வெண்டிக்காய்களை உடைத்து பார்த்தும் பின் வாங்குவது போன்றதுதான் நடைபெறப்போகின்ற பிரதிநிதிகள் தெரிவும்.

அப்படியென்றால் புதிய கடை நல்லமா? என்றால், அதுவும் யாருக்கு தெரியும். புதுசுதான், ஆனால் நுகர்வுக்கு உகந்ததா? என்று.

சிங்களவர்கள் போல தமிழர்களிடம் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவெடுக்கும் தன்மை என்பது அரிதுதான். அவர்கள் ஒருவரை ஆதரிக்க அவர்களை தாங்கினார்கள்.

கம்பராமாயணத்தில் இராமன் எனும் தலைவனை அத்தனை பேரும் தாங்கியது போல் அந்த அணியையும் சனாதிபதித் தேர்தலில் அத்தனை பேரும் தாங்கினார்கள்.

நாம் கொட்டும் மழைக்காலம் உப்பு விற்போம், கடுங்காற்றில் மாவு விற்போம்.

இது தமிழினத்தின் சாபம். இவற்றை சொல்வதெல்லாம் எந்த விசப்பரீட்சை என்றாலும் நாம் நிதானமாக முகம் கொடுக்க வேண்டும் என்பதற்கே.

இதுவரை இருந்ததைவிட நிலைமை இன்னும் மோசமாகும். ஒரு தீர்க்கமான நிலைப்பாடற்றதும் பாராளுமன்றப் பலமற்றதுமான பிரதிநிதித்துவம் என்பது பொருத்தமற்றது.

இது தொடர்பில் மக்கள் நிச்சயம் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

அப்படியானால் எந்த விசப்பரீட்சையையும் இலகுவாக தாண்டிவிடலாம். இன்னும் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்கின்றோம். எதிரியின் பலம் தெரியாமல் கடைக்காக ஆட்களை அனுப்புவதில் என்ன பயன்? அதனால்தான் இம்முறைத்தேர்தல் வாக்காளர்களுக்கு விசப்பரீட்சை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *