Type to search

ஆன்மீகம்

மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலய மஹோற்சவம் நாளை ஆரம்பம்

Share

மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மஹோற்சவம்
நாளை (25.07.2020) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் மஹோற்சவம் நடைபெறும்.

வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் மஹோற்சவ விஞ்ஞாபன அறிவித்தலின் பிரகாரம் கால நேர ஒழுங்கையும் விசேடமாக கைக்கொள்ளவேண்டிய தற்கால சுகாதார விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றுதலிற்கான பூரண ஒத்துழைப்பை அடியார்கள் அனைவரிடமும் மிக வினயமாக வேண்டிக்கொண்டு மிகுந்த ஆசார சீலர்களாக ஆலய கிரியாகால நிகழ்வுகள் யாவற்றிலும் கலாச்சார, சமய, சுகாதார விதிகளுடன் ஒன்றிணைவோம் என்று அன்பு வேண்டுதலை ஆலய பரிபாலன சபை அன்புரிமையுடன் கோருகின்றது.

இவ் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் பேரெழுச்சியுடன் கோலாகலமாககொண்டாடப்படும் நிலமை கொரோனா வைரஸ் (கொவிட்-19) உலகத் தொற்று காரணமாக வரையறைகளுக்குட்பட்டதாக அமைந்த போதும் அடியார்கள் தங்கள் ஆன்மீக வழிபாடுகளை விதி முறைகளை அனுசரித்து மேற்கொள்ள அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

மண்டைதீவு
வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி
அம்மன் ஆலய பரிபாலன சபை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *