Type to search

ஆன்மீகம்

நல்லூரானின் மஹோற்சம் கொடியேற்றத்துடன் நாளை ஆரம்பம்; கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது

Share

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் வழிபாடுகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் நடைபெறவுள்ளது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *