Type to search

International News

உலகளவில் கொரோனாவால் 4 இலட்சத்து 55 ஆயிரம் பேர் பலி!

Share

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 இலட்சத்து 55 ஆயிரத்தைக் கடந்தது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்குப் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (19.06.2020) 4 இலட்சத்து 55 ஆயிரத்தைக் கடந்தது.

தற்போதைய நிலவரப்படி 85 இலட்சத்து 65 ஆயிரத்து 554 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 36 இலட்சத்து ஆயிரத்து 977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து
465 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

கொரோனாவிலிருந்து 45 இலட்சம் பேர் குணமடைந்தனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 இலட்சத்து 55 ஆயிரத்து 487 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 1,20,621
பிரேசில் – 47,869
இந்தியா – 12,237
இங்கிலாந்து – 42,288
ஸ்பெயின் – 27,136
இத்தாலி – 34,514
மெக்சிக்கோ – 19,080
பிரான்ஸ் – 29,603

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *