Type to search

Cinema

திரையுலகம் உரிய அங்கீகாரத்தைக் கொடுக்காததே சுஷாந்த் சிங் தற்கொலைக்குக் காரணம் – கங்கனா ரணாவத்

Share

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், அவர் தெரிவித்ததாவது, பாலிவுட் திரையுலகம் சுஷாந்தை முறையாக நடத்தவில்லை. அவருக்கு போதிய திறமை, நல்ல நடிப்பு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் கொடுத்த போதிலும், திரையுலகம் அவருக்கு முறையான அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை.

சுஷாந்த் சிங்கின், முதல் திரைப்படமான கை போ சேவில் அவரது நடிப்பு ஏன்? பெரியளவில் பேசப்படவில்லை?
அவர் இறுதியாக நடித்த சிச்சோரே போன்ற ஒரு அற்புதமான படம் புறக்கணிக்கப்பட்டு, கல்லி பாய் போன்ற மோசமான படத்திற்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது ஏன்?

அதே போன்று என்னுடைய படைப்புக்களையும் ஆதரிக்க மறுப்பது ஏன்? சமூக வலைத்தளங்களில் சுஷாந்த் சிங், பற்றி தொடர்ந்து தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.


திறமை இல்லை எனத் தன்னைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை சுஷாந்த் சிங், நம்பியது மட்டுமே அவர் செய்த மிகப்பெரிய தவறு என கங்கனா ரணாவத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *