Type to search

International News

உலகளவில் 8 மில்லியன் பேர் கொரோனாவால் உயிரிழப்பு

Share

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்தைத் தாண்டியது.


சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்குப் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.


இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


இந்நிலையில் உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களிள் எண்ணிக்கை 80 இலட்சத்தைக் கடந்தது.


இன்று (16.06.2020) காலை 9 மணி நிலவரப்படி 80 இலட்சத்து 73 ஆயிரத்து 626 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.


வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 34 இலட்சத்து 57 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 41 ஆயிரத்து 78 ஆயிரத்து 877 பேர் குணமடைந்தனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 இலட்சத்து 37 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *