Type to search

International News

கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்கள் மாயம்

Share

இந்தியா-தமிழ்நாடு

கொரோனா மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்கு பின்,

கடந்த சனிக்கிழமை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர், மலர், ஆனந்த், ஜேசு ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலை மீன் பிடித்துவிட்டு கரை திரும்பி இருக்க வேண்டும் ஆனால் நேற்று மாலை வரை கரை திரும்பாததால் இன்று காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு படகுகளில் பத்து பேர் மாயமான மீனவர்களை தேடி கடலுக்குள் சென்றனர்.

ஆனால், தற்போது வரை மீனவர்கள் குறித்து தகவல் கிடைக்காததால் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *