Type to search

Sport

அப்ரிடிக்கு கொரோனா உறுதி

Share

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 இலட்சத்து 52 ஆயிரத்து 944 ஆகவுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 28 ஆயிரத்து 525 ஆகவுள்ளது .

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. அந்தவகையில் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 2,551 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,472 ஆகவுள்ளது. மேலும் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை(11.06.2020) முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. என் உடல் மோசமாக வலித்தது.


நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ் எனத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *